“போட்டி இன்னும் முடியல.. நாளைக்கு இந்தியாவின் 10 விக்கெட்டையும் எடுப்போம்” – சோயப் பஷீர் சவால்

0
1218
Bashir

இங்கிலாந்து அணி இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்காக இரண்டு அறிமுக சுழல் பந்துவீச்சாளர்களை இந்தியாவிற்கு கொண்டுவந்து வெற்றிகரமாக அவர்களை செயல்பட வைத்து சாதித்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில், உள்நாட்டுப் போட்டியில் பெரிய அனுபவம் இல்லாத இடதுகை சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி, ஏழு விக்கெட் வீழ்த்தி இந்திய அணியை சாய்த்தார்.

- Advertisement -

இதேபோல் தற்பொழுது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் 21 வயதான வலதுகை சுழல் பந்துவீச்சாளர் சோயப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணிக்கு 46 ரன்கள் முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

ஆனால் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் மிகவும் சொதப்பலாக விளையாடி 145 ரன்களுக்கு அவுட் ஆகியது. இதன் காரணமாக இந்திய அணிக்கு மொத்தமாக 192 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டது.

இன்று இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் எட்டு ஓவர்களை சந்தித்து விக்கெட்டை தராமல் 40 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். மேலும் இரண்டு நாட்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 152 ரன்கள் மட்டுமே தேவை. இத்தோடு இந்திய அணியின் கையில் 10 விக்கெட்டுகளும் இருக்கிறது. இந்த நிலையில் தங்களால் இந்த ஆடுகளத்தில் பத்து விக்கெட் கைப்பற்ற முடியும் என சோயப் பஷீர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நாங்கள் கடைசி கட்டத்தில் இந்திய அணியின் ஒன்று இரண்டு விக்கெட்டுகளை பெற விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் நாளை நானும் ஹார்ட்லியும் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும். இந்த ஆடுகளத்தில் அது முடியாத காரியம் கிடையாது.

நான் குழந்தையாக இருந்த பொழுது என்னுடைய அணியின் பெரிய வீரர்களை பார்த்திருக்கிறேன். அவர்களுடன் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருப்பது மிகவும் சிறந்த அனுபவம். மேலும் அவர்கள் என்னுடைய நம்பிக்கையை அதிகரிக்க செய்கிறார்கள். சிறந்த குழுவின் ஒரு அங்கமாக நான் இருக்கிறேன்.

இதையும் படிங்க : “நான் சல்யூட் பண்ணது டீமுக்கு இல்ல.. இவருக்குத்தான்” – துருவ் ஜுரல் உருக்கமான பேச்சு

சமீபத்தில் மறைந்த என்னுடைய இரண்டு தாத்தாக்களுக்கும் இந்த ஐந்து விக்கெட்டை அர்ப்பணிக்கிறேன். அவர்கள் எப்பொழுதும் டிவியின் முன் அமர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. இது மிகவும் உணர்வுபூர்வமான தருணம்” எனக் கூறியிருக்கிறார்.