ஆர்.சி.பி அணியின் முன்னணி வீரர் ஐபிஎல் தொடரில் இருந்து திடீர் விலகல்!

0
2192

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடரின் முதல் 6 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று ஏழாவது போட்டியில் குஜராத் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நடைபெற இருக்கிறது .

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியில் பலவீரர்களுக்கு காயமடைந்து போட்டித் தொடரில் பங்கேற்காமல் விலகியது பெரிய ஏமாற்றமாக அமைந்தது . அந்த வகையில் கொல்கத்தா மும்பை டெல்லி சென்னை லக்னோ பெங்களூரு என அநேகமான அணிகள் வீரர்களை காயம் காரணமாக இழந்திருக்கின்றன

- Advertisement -

இந்நிலையில் போட்டி தொடர ஆரம்பித்த பின்பும் காயத்திலிருந்து மீள முடியாமல் சில வீரர்கள் தொடரின் ஆரம்பத்திற்கு பிறகு விலகுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எட்டு விக்கெட் கீகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாரமாக வெற்றி பெற்றது.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரினை மிகவும் உற்சாகமாக rcb தொடங்கி இருக்கும் வேலையில் அந்த அன்னைக்கு மற்றொரு பின்னடைவான செய்தி கிடைத்து இருக்கிறது . ஏற்கனவே காயம் காரணமாக ஜாஸ் ஹேசல்வுட் முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் காயத்திலிருந்து குணமாகி வந்த மற்றொரு வீரரான ராஜா பட்டிதார் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகி இருப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆர் சி பிரியாணிக்கு மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ரஜாத் பட்டிதார் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் தொடக்கத்தில் குதிகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆரம்பக் கட்ட போட்டிகளில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது முழு ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் . இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவான செய்தி வந்திருக்கிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்டிதார் 12 போட்டிகளில் விளையாடி 404 ரன்கள் குவித்திருந்தார். இதில் இரண்டு அரை சதங்களும் ஒரு சதமும் அடங்கும். கடந்த ஆண்டின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக 112 ரன்கள் அடித்து ஆர்சிபி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபியின் அரை இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.