அப்ரிடி வழியில் 7 நாளில் ஓய்வு முடிவை வாபஸ் பெற்ற தோனி படையின் முன்னணி இந்திய வீரர்!

0
2829
Dhoni

கடந்த வாரத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி 37 வயதான இந்திய ஆல் ரவுண்டர் ஒருவர் ஓய்வு முடிவை அறிவித்து இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி ஓய்வு முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டிருக்கிறார்!

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணியின் கேப்டன் தமிம் இக்பால் திடீரென ஓய்வு முடிவை அறிவித்து பிறகு பங்களாதேஷின் பல பெரிய கைகள் கேட்டுக்கொள்ள திரும்ப வந்தார். இதற்கு முன்னோடியாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி இருந்தார். இப்பொழுது இந்திய அணி வீரர் ஒருவர் இவ்வாறு செய்திருக்கிறார்.

- Advertisement -

அந்த இந்திய வீரர் மனோஜ் திவாரி. இவர் இந்திய அணிக்காக 2011 ஆம் ஆண்டில் அறிமுகமாகி ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் சிலவற்றில் விளையாடியிருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்திருக்கிறார்.

இவருடைய செயல்பாடுகள் ஓரளவுக்கு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நன்றாக இருந்த போதிலும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியில் இவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் தரப்படவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இவர் தனது மாநில அணியான பெங்கால் அணிக்கு தொடர்ச்சியாக விளையாடி வந்தார். மேலும் கடந்த ஆண்டு பெங்கால் அணியை ரஞ்சி இறுதிப் போட்டிக்கும் அழைத்து வந்தார்.

இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் என நான்கு அணிகளுக்கு விளையாடி இருக்கிறார்.

மேலும் இவர் மேற்குவங்க மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சியில் இணைந்து அவரது அரசவையில் விளையாட்டு துறை மந்திரியாகவும் தற்பொழுது தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான சினேகாசிஸ் சவுரவ் கங்குலி உடன் ஒரு முக்கியமான உரையாடலை நடத்தினார். அதன் பிறகு மனோஜ் திவாரி தனது ஓய்வு முடிவை திரும்ப வாபஸ் பெற்று இருக்கிறார். இதை அடுத்து இவர் பெங்கால் மாநில அணிக்காக தொடர்ந்து தலைமை ஏற்று விளையாட இருப்பார் என்று தெரிய வருகிறது.

இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக 141 முதல் தர போட்டிகள், 169 லிஸ்ட் ஏ போட்டிகள், 183 டி20 போட்டிகள் விளையாடி இருக்கிறார். மேலும் இவர் முதல் தர போட்டிகளில் 9902 ரன்களை 48.56சராசரியில் எடுத்திருக்கிறார். இதில் 29 சதங்களும், 45 அரை சதங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டு இவர் அறிமுகமானபோது, இன்னும் கொஞ்சம் வாய்ப்புகள் சேர்த்து கிடைத்திருந்தால், இந்திய அணியில் இவர் நிரந்தரமான வீரராக கூட மாறியிருக்க முடியும். ஏனென்றால் இவர் வலது கையில் லெக் ஸ்பின் வீசக்கூடிய பேட்டிங் ஆல் ரவுண்டர். ஆனால் இவருடைய இடத்திற்கு வேறு சில வீரர்கள் வந்ததால் எல்லாம் மாறிவிட்டது!

- Advertisement -