நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே முதல் தகுதிச் சுற்று போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி செய்யவிருக்கும் மாற்றம் குறித்து வாஷிங் ஜாபர் பேசியிருக்கிறார்.
கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் அந்த அணி எல்லா துறைகளிலும் மிக வலிமையாக இருக்கிறது. தற்பொழுது அந்த அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுத்து வந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பில் சால்ட் நாடு திரும்பி இருக்கிறார். அவருடைய இடத்தில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் குர்பாஸ் விளையாடுவார்.
மேலும் கொல்கத்தா அணியை பொறுத்த வரையில் எடுத்துக்கொண்டால் அவர்கள் 10 நாட்களாக விளையாடாமல் இருக்கிறார்கள். அதே சமயத்தில் ஹைதராபாத் அணி கடந்த போட்டியில் சன்விர் சிங் என்கின்ற கூடுதல் பேட்ஸ்மேனை வைத்து விளையாடியது. அது அவர்களது பவுலிங் யூனிட்டை பாதித்தது.
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் வாசிம் ஜாஃபர் கூறும் பொழுது “சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது பந்து வீச்சு வரிசையில் கூடுதலாக இன்னொரு வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அவர்கள் கடந்த போட்டியில் நிதீஷ் குமார் மற்றும் ஷாபாஷ் அகமதை பயன்படுத்தியது அவர்களுக்கு சரியான முடிவை கொடுக்கவில்லை. சன்விர் சிங் ஒரு பேட்ஸ்மேனாக அதிகம் பயன்படவில்லை.
எனவே அவர்கள் கொல்கத்தா அணிக்கு எதிராக முதல் தகுதி சுற்றும் போட்டியில் ஜெயதேவ் உனட்கட்டுக்கு ஒரு இடத்தை கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் குஜராத் அகமதாபாத் மைதானம் பேட்டிங் செய்ய நல்ல முறையில் இருக்கும். எனவே அங்கு கூடுதல் ஒரு பந்துவீச்சாளர் தேவைப்படுவார். மேலும் ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் இதை நிச்சயம் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: டி20 உ.கோ-ல இந்திய அணிக்கு ஒரு ஸ்பெஷல் தலைவலி இருக்கு.. இத சரி பண்ணி ஆகனும் – சுரேஷ் ரெய்னா பேட்டி
குருபாசுக்கு போட்டி பயிற்சி நேரம் கிடைக்கவில்லை. இவர் பில் சால்ட் இடத்தில் விளையாடுவார் என்பது உறுதி. ஆனால் இவருக்கு கொஞ்சம் பேட்டிங் பயிற்சிக்காக போட்டிகள் கிடைக்கவில்லை. மேலும் மொத்தக் கொல்கத்தா அணியினரும் கடந்த 10 நாட்களாக விளையாடாமல் இருந்து வருகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.