ஏடாகூடமாக கேள்வி கேட்ட பத்திரிகையாளர்.. சளைக்காமல் பதிலடி தந்த சமி.. மாஸ் சம்பவம்!

0
1391
Shami

நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு இந்த உலகக்கோப்பையில் பல வகைகளில் நன்மையாக அமைந்திருக்கிறது.

ஹர்திக் பாண்டியா காயத்தால் விளையாட முடியாமல் போனது இந்திய அணிக்கு பின்னடைவு என்றால், அவருக்கு பதிலாக விளையாட வைக்கப்பட்டவர்கள் செயல்பட்டது இந்திய அணிக்கு நல்ல செய்தி.

- Advertisement -

இப்படி இந்திய அணிக்கு எது ஒன்று தவறாக நடந்தாலும் அதற்கு மாற்றாக ஒரு நல்லது நடந்து கொண்டே இருக்கிறது. ஸ்ரேயாஸ் முதுகு வழியில் இருக்க உள்ளே வந்த கேஎல்.ராகுல் சதம் ஆசியக் கோப்பையில் அடித்தது போல.

நேற்று ஹர்திக் பாண்டியா இடம்பெறாத காரணத்தினால் அணியில் இரண்டு மாற்றங்கள் நடைபெற்றது. சூரியகுமார் யாதவ் மற்றும் முகமது சமி இருவரும் உள்ளே வந்தார்கள். நேற்றைய நாள் சூரிய குமாருக்கு சரியாக அமையவில்லை. ஆனால் அவருக்கு அடுத்து பேட்டிங் வந்த ரவீந்திர ஜடேஜா மீண்டும் தன்னுடைய பேட்டிங் திறமையை நிரூபித்தார்.

இந்த நிலையில் வாய்ப்பு பெற்ற முகமது சமி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி, தான் எல்லா போட்டிகளிலும் விளையாட தகுதியான வீரர் என்று நிரூபித்தார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். நேற்று இந்திய அணியின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பையும் முகமது சமியே செய்தார். இதில் அவரிடம் ஏடாகூடமாக கேட்கப்பட்ட எல்லா கேள்விக்கும் சிறப்பான பதிலை கொடுத்தார்.

- Advertisement -

கேள்வி.. உங்கள் ஐந்து விக்கெட்டுகளை பற்றியும் பேசுங்கள் சமி.
சமி.. ஓகே. நீங்கள் என்னிடம் அதைப் பற்றி கேள்வி கேளுங்கள்.

கேள்வி.. நீங்கள் பந்தின் தையலை பயன்படுத்தி அப்ரைட் சீமி ல் மட்டுமே சொல்லுங்கள்..
சமி.. பாஜி.. எனக்கு இன்னும் நிறைய விஷயங்கள் தெரியும்.

கேள்வி.. நியூசிலாந்து அணியின் போல்ட், பெர்ஷன், ஹென்றி மூன்று பேரும்தான் இங்கு சிறந்தவர்களாக மதிப்பிடப்பட்டார்கள்?..
சமி.. நீங்கள் முடிவை பார்த்தீர்கள்! எந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி சிறந்ததாக இருந்தது?!

கேள்வி.. நியூசிலாந்து பந்து வீசும் போது மூடுபனி வந்தது அது இந்தியாவுக்கு பலன் அளித்ததா?
சமி.. பாருங்கள் நாம் வெற்றி பெறும் பொழுது வெளியில் இப்படித்தான் பேசுவார்கள். ஆனால் இதை நீங்கள் தோற்று இருந்தால் இதே கருத்தை மாற்றி வேறு மாதிரி பேசுவார்கள்.