2019 WC செமி பைனல்.. இந்தியா செய்த 3 தவறுகள்.. இத தவிர்த்தாலே இந்த முறை நியூசிலாந்தை ஜெயிச்சுடலாம்.!

0
18989

நேற்று இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டிக்கு பிறகு, இந்தியா நியூசிலாந்து அணிகள் அரை இறுதியில் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுவது உறுதியாகி இருக்கிறது!

இந்திய அணி கடைசியாக 2013 ஆம் ஆண்டு தான் ஐசிசி தொடர் ஒன்றைக் கைப்பற்றி இருக்கிறது. உலகக் கோப்பையை கடைசியாக 2011 ஆம் ஆண்டு கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

இதற்குப் பிறகு தொடர்ச்சியாக இந்திய அணி நாக் அவுட் போட்டிகளில் தோல்வி அடைவது வாடிக்கையாக இருக்கிறது. அதுவும் சமீப காலத்தில் அரையிறுதியில் தோல்வி அடைவது பெரிய தலைவலியாக இருக்கிறது.

கடந்த முறை 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அரை இறுதியில் வெற்றி வாய்ப்பை தொட்டுவிடும் தூரத்தில் இருந்து இந்திய அணி தோல்வி அடைந்தது.

அந்தப் போட்டியில் செய்த மூன்று தவறுகளை இந்த முறை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் செய்யாமல் இருந்தாலே இந்திய அணி வெற்றி பெற்று விடும். அது என்னவென்று பார்ப்போம்.

- Advertisement -

கடந்த முறை முகமது சமி கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்படும் அவரை அரையிறுதியில் நீக்கினார்கள். இந்த முறை சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றால், சமியை நீக்கி அஸ்வினை கொண்டு வரக்கூடாது. மீண்டும் இப்படியான தவறை செய்ய மாட்டார்கள் என்று நம்புவோம்.

அடுத்து இந்திய அணி சமீபக் காலத்தில் நாக் அவுட் போட்டிகளில் நம்பிக்கையான மனநிலையுடன் விளையாடுவது கிடையாது. திடீரென அழுத்தத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். எனவே வழக்கமான மற்றும் தைரியமான மனநிலையுடன் போட்டியை அணுக வேண்டும்.

அடுத்து கேன் வில்லியம்சன் பந்துகளை எடுத்துக்கொண்டு பொறுமையாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று அவரை சுலபமாக நினைத்துக் கொள்ளக் கூடாது. அவர் ஒரு முனையில் நிற்க, மறுமுனையில் அவரை சுற்றிய எல்லோரும் விளையாடி பெரிய ஸ்கோருக்கு போய்விடுவார்கள். எனவே வில்லியம்சன் விக்கெட்டை கைப்பற்ற ஆரம்பத்திலிருந்து தாக்குதல் முறையில் பந்துவீச்சில் செல்ல வேண்டும். இது சரியாக நடந்தால் இந்தியா இறுதிப்போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் இருக்கும்!