இறுதிப்போட்டியில் எங்களைச் சந்திக்க மெல்போனுக்கு விமானம் ஏற இந்திய அணிக்குத் தகுதி கிடையாது – அக்தர் சர்ச்சை பேச்சு!

0
1776
Akthar

எட்டாவது உலகக்கோப்பை தொடரில் முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது!

இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை விட மோசமாக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது!

- Advertisement -

இந்திய அணி எந்த எதிர்ப்பையும் காட்டாமல் ஒரு முக்கியமான அரையிறுதி போட்டியில் சரணடைந்து தோல்வியை தழுவியது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களை தாண்டி மற்ற நாட்டு வீரர்களின் பேசுபவர்களுக்கும் கடுமையாக உள்ளானது.

இன்னும் ஒரு படி மேலே போய் இந்திய மூத்த நட்சத்திர வீரர்களின் ஓய்வு குறித்த பேச்சுகள் பரவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் சில கருத்துக்களை சர்ச்சைக்குரிய முறையில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் பொழுது
” இந்திய அணி இப்பொழுது செயல்பாட்டில் மிக குறைவான நிலையில் உள்ளது. ஏனென்றால் அவர்கள் ஐசிசி தொடரில் செயல்படுவது அப்படியாக இருக்கிறது. இந்திய அணி அரையிறுதிக்கு வந்த விதத்தை பார்த்தால், அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணியை வென்றிருந்தார்கள் அவ்வளவுதான். இந்தியா அவர்களின் தலைமை யார் என்று பார்க்க வேண்டும். இதற்கு அவர்களின் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். அவர்களின் அணித் தேர்வே மிகவும் குழப்பமானது ” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“இந்தியாவிடம் இருந்து இது மிகவும் ஏமாற்றம் அளிக்க மாட்டோம். அவர்கள் இறுதிப் போட்டியில் எங்களை சந்திக்கவோ மெல்போன் மைதானத்துக்கு வர விமானம் ஏறவோ தகுதியற்றவர்கள். அவர்களின் அணி தேர்வு மிகவும் குழப்பமாக இருந்தது. அவர்களின் வேகப்பந்துவீச்சாளர்கள் சில நிபந்தனைகளில் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்பதே உதாரணம்” என்று கடுமையாகக் கூறியிருக்கிறார்!