ஐஎல்டி20.. ஷாஹீன் முதல் ராயுடு வரை குவியும் நட்சத்திர வீரர்கள்.. எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்.. முழு விபரம்

0
3658

2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பின் கேப்டன் தோனி, இந்த வெற்றிக்கு பின் இந்தியாவில் டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சியை கற்பனை செய்ய முடியாத ஒன்றாக இருக்கும் என்று கூறி இருப்பார். தோனி கூறிய அடுத்த ஆண்டிலேயே இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ், பாகிஸ்தான் தரப்பில் பிஎஸ்எல், இலங்கையில் லங்கா பிரீமியர் லீக், வங்கதேசத்தில் பிபிஎல், இங்கிலாந்தில் தி ஹன்ரெட், வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர், அமெரிக்காவில் கூட மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வரிசையில் அண்மை காலங்களில் ரசிகர்களிடையே எஸ்ஏ 20 மற்றும் இண்டர்நேஷனல் பிரீமியர் லீக் தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் அந்த டி20 லீக் தொடர்களிலும் முதலீடு செய்திருப்பதே காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் இந்திய ரசிகர்கள் பார்க்கும் வகையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இண்டர்நேஷனல் லீக் டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கவுள்ளது. கல்ஃப் ஜெய்ண்ட்ஸ், மும்பை எமிரேட்ஸ், ஷார்ஜா வாரியர்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ், டெசர்ட் வைப்பர்ஸ், துபாய் கேப்பிடல்ஸ் என்று 6 அணிகள் ஐஎல்டி20 லீக் தொடரில் விளையாடவுள்ளன. இன்று நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கல்ஃப் ஜெய்ண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷார்ஜா வாரியர்ஸ் அணி விளையாடவுள்ளது.

துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய 3 மைதானங்களில் மொத்தமாக 34 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இன்று தொடங்கி பிப்.17 வரை ஐஎல்டி20 லீக் தொடர் நடக்கவுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐஎல்டி20 லீக் போட்டிகள் மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரசிகர்களை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

அதேபோல் இந்திய ரசிகர்கள் இந்த ஐஎல்டி20 லீக் தொடரை ஜீ டிவி, ஜீ டிவி ஹெச்டி, சோனி சிக்ஸ் மற்றும் சோனி சிக்ஸ் ஹெச்டி ஆகிய சேனல்களில் பார்க்க முடியும். ஓடிடி-யை பொறுத்தவரை ஜீ5 செயலியில் பார்க்கலாம். இம்முறை மும்பை அணியில் அம்பாதி ராயுடு, பிராவோ, குசால் பெரேரா, போல்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விளையாட உள்ளனர். அதேபோல் சாஹின் அப்ரிடி, ஷதாப் கான் உள்ளிட்டோரும் விளையாடவுள்ளனர்.