The Hundred: சாம் கரன், ஸ்ம்ரிதி மந்தானா அணிகள் சாம்பியன்.. பரிசுத்தொகை விவரங்கள் இதோ!

0
613

புது வகையான கிரிக்கெட் போட்டிகளை அறிமுகப்படுத்துவதில் இங்கிலாந்து நாடு என்றுமே முதலிடத்தில் இருக்கிறது . அந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் டி 20 கிரிக்கெட் . தற்போது தி 100 என்ற புது வகையான கிரிக்கெட் வடிவத்தை கடந்த வருடத்திலிருந்து அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான தி 100 போட்டித் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது .

இந்தப் போட்டியில் இங்கிலாந்தை மையமாகக் கொண்ட பிர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ்,இலண்டன் ஸ்பிரிட்,மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ், நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ், ஓவல் இன்வின்சிபில்ஸ், சதர்ன் பிரேவ், டிரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் வெல்ஷ் ஃபயர் ஆகிய எட்டு அணிகள் மோதின. இந்தப் போட்டியானது 100 பந்துகளை கொண்ட வித்தியாசமான போட்டியாகும். வழக்கமான கிரிக்கெட்டில் இருந்து மாறுபட்டு ஓவர் கணக்குகள் இல்லாமல் பந்துகள் கணக்குகளில் போட்டி நடத்தப்படும். ஒரு பந்துவீச்சாளர் ஒரு ஓவரில் 5 பந்துகள் வீச வேண்டும். மேலும் இந்தப் போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் விரும்பினால் அவரைப் பார்த்துப் பகுதிகளை தொடர்ச்சியாகவும் வீசலாம்.

- Advertisement -

இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஜோஸ் பட்லர் தலைமையிலான மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி மற்றும் சாம் பில்லிங்ஸ் தலைமையிலான ஓவல் இன்வின்சிபில்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன . லண்டன் நகரில் அமைந்துள்ள பிரபலமான லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியின் கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய ஓவல் இன்விசிபில்ஸ் அனையினருக்கு துவக்கமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது .

ஒரு கட்டத்தில் அந்த அணியினர் 36 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தனர். அப்போது ஜோடி சேர்ந்த ஓவல் இன்விசிபில்ஸ் அணியின் ஆல்ரவுண்டர்களான டாம் கரண் மற்றும் ஜிம்மி நிஷாம் இருவரும் அதிரடியாக ஆடி தங்களது அணியை சரிவிலிருந்து மீட்டனர் . மேலும் வலுவான ஒரு வெற்று இலக்கை நிர்ணயிப்பதற்கும் இவர்களது ஆட்டம் கை கொடுத்தது.

இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய டாம் கரன் இந்த போட்டியிலும் 34 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் விளக்காமல் இருந்தார். இவருக்கு இணையாக ஆடிய ஜிம்மி நிஷாம் 33 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உடன் 57 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் . இவர்கள் இருவரது அதிரடி ஆட்டத்தால் ஓவல் இன்விசிபில்ஸ் அணியினர் 100 பந்துகளில் 161 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தனர். ஜிம்மி நிஷா மற்றும் டாம் கரன் இருவரும் ஆறாவது விக்கெட் இருக்கு 64 பந்துகளில் 127 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மான்செஸ்டர் ஒரிஜினல் அணி நூறு பந்துகளில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் தி 100 தொடரில் ஓவல் இன்விசிபில்ஸ் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியின் துவக்க வீரர்களான பட்லர் மற்றும் சால்ட் இருவரும் முறையே 11 மற்றும் 25 ரன்களில் ஆட்டம் இழக்க அதன் பிறகு வந்த எந்த ஒரு வீரரும் நிலைத்து நின்று ஆடாததால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

மான்செஸ்டர் ஒரிஜினல் அணிக்காக மேக்ஸ் ஹோல்டல்டன் 25 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உடன் 37 ரன்கள் எடுத்திருந்தார். மான்செஸ்டர் ஒரிஜினல் அணியின் பந்துவீச்சில் வில் ஜேக்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும் சாம் கரன் டாம் கரன் நேத்தன் மற்றும் டேனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர் . இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாக டாம் கரன் அறிவிக்கப்பட்டார். மேலும் தொடர் நாயகன் விருதை ஜிம்மி ஓவர்டன் கைப்பற்றினார்.

ஆண்களுக்கு நடத்தப்பட்டதை போன்றே பெண்களுக்கும் தி 100 போட்டிகள் நடைபெற்றன இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மேன் செஸ்டர்ஸ் ஒரிஜினல் பெண்கள் அணி மற்றும் சதன் பிரவோ பெண்கள் அணிகள் மோதின . இந்தப் போட்டியில் சதன் பிராவோ பெண்கள் அணியினர் ஏவிக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றனர். முதலில் ஆடிய மேன்செஸ்டர்ஸ் அணி 118 ரன்கள் மட்டுமே எடுத்தது . இதனைத் தொடர்ந்து ஆடிய சதர்ன் பிராவோ அணியினர் 72 பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். அந்த அணியின் டேனியாலா மிகச் சிறப்பாக விளையாடி 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்தார். இந்த வெற்றி பெற்ற சதன் பிராவோ அணியில் இந்திய மகளிர் அணியின் வீராங்கனையான ஸ்மிருத்தி மந்தானா இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகையாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் யூரோ தொடங்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு 1 கோடியே 33 லட்சம் ஆகும். மேலும் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த ரன்னர் அணிகளுக்கு பரிசுத்தொகையாக 75 ஆயிரம் யூரோ வழங்கப்பட்டது . இதன் இந்திய மதிப்பு சுமார் 68 லட்சம். மேலும் இந்த போட்டியில் வீரர்களின் விருதுகளுக்காக 75 ஆயிரம் ஹீரோக்கள் வழங்கப்பட்டது . இந்தப் போட்டி தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு பரிசுத்தொகை சமமாகவே வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .