“இவங்களை ஏன் மிஸ் பண்ணினோம்” என்று கொல்கத்தா அணியை புலம்ப வைத்த 4 வீரர்கள்!

0
2493

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது பிளே ஆப் சுற்று போட்டிகளுக்கு ஒரு வாரமே இஞ்சி இருக்கும் நிலையில் குஜராத் அணி மட்டும் நேற்றைய வெற்றியின் மூலம் பெயர் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது .

சென்னை மும்பை மற்றும் லக்னோ அணிகள் தகுதி பெறும் நிலையில் இருந்தாலும் மீதி இருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன . இவை தவிர கொல்கத்தா பஞ்சாப் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளும் பிள்ளையார் சுற்றிற்கான பந்தயத்தில் இருக்கிறது . இதனால் லீக் போட்டிகளின் இறுதி வாரம் பரபரப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது .

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியை வென்றது கொல்கத்தா அணி . இதன் மூலம் அந்த அணி போட்டியிலிருந்து வெளியேறாமல் இன்னும் பிளே ஆப் தகுதிக்கான வாய்ப்புகளில் இருக்கிறது. இந்த வருடம் கொல்கத்தா அணியில் மற்றும் நித்திஷ்ரானா தவிர மற்ற எந்த வீரரும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை . அந்த அணியின் பந்துவீச்சாளர்களும் போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் இருந்து வருகின்றனர் . கொல்கத்தா அணி கழற்றி விட்ட நான்கு வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் கலக்கி வருகின்றனர். அவர்கள் யார் என்று பார்ப்போம் .

சஞ்சு சாம்சன்;
2012 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சஞ்சு சம்சன் . ஆனால் அவருக்கு அந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை . அவரை 2013 ஆம் ஆண்டு விடுவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் . அதே ஆண்டு ராஜஸ்தான் அணி இவரை தேர்ந்தெடுத்து இவருக்கு வாய்ப்பு வழங்கியது . கடந்த வருடம் முதல் அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார் சஞ்சு சாம்சன் . இதுவரை 151 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 3886 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 20 அரை சதங்களும் 3 சதங்களும் அடங்கும் . கொல்கத்தா அணி இவரை தக்க வைத்திருந்தால் அந்த அணியின் மிகப்பெரிய சொத்தாக இருந்திருப்பார் .

சூரியகுமார் யாதவ் :
2014 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட சூரியகுமார் யாதவ் 2017 ஆம் ஆண்டு வரை அந்த அணிக்காக விளையாடினார் . இந்த காலகட்டத்தில் கொல்கத்தா அணியின் துணை கேப்டன் ஆகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது . 2018 ஆம் ஆண்டின் ஏலத்திற்கு முன்பாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் அந்த ஆண்டு ஏலத்தில் இவரை எடுத்த மும்பை நிர்வாகம் இவரைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது . இன்று உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மனாக இருக்கும் சூரியகுமார் யாதவ் இந்த வருட ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பல வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார் . இந்த வருடம் மட்டும் 12 போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 479 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நான்கு அரை சதங்களும் ஒரு சதமும் அடங்கும் .

- Advertisement -

சுப்மன் கில் :
2018 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையின் தொடர் நாயகன் ஆன கில் அந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் . 2021 ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் கொல்கத்தா அணிக்காக விளையாடினார் . இந்தியாவின் வருங்கால நட்சத்திரமாக பார்க்கப்படும் இவர் 2022 ஆம் ஆண்டு முதல் குஜராத் அணிக்காக ஆடி வருகிறார் . இந்த வருட ஐபிஎல் தொடரில் மட்டும் 13 போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 576 ரண்களை குவித்துள்ளார் இதில் நான்கு அரை சதங்களும் ஒரு சதமும் அடங்கும் . இந்திய அணிக்காகவும் குஜராத் அணிக்காகவும் சிறப்பாக ஆடிவரும் கில் கொல்கத்தா அணி நிர்வாகம் நீக்கியது நினைத்து இன்று மிகவும் வருத்தப்படும் .

ட்ரெண்ட் போல்ட் :
நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ட்ரெண்ட் போல்ட் 2017 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார் . அதன் பிறகு மும்பை அணியில் ஆடிய இவர் கடந்த ஆண்டு முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார் . இந்தத் தொடர் முழுவதும் பவர் பிளே ஓவர்களில் குறைந்தபட்சம் ஒரு விக்கெட் இவர் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தத் தொடர் முழுவதுமாக சொதப்பி வரும் நிலையில் இவரை அந்த நிர்வாகம் தக்க வைத்திருந்தால் அந்த அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக இருந்திருப்பார்.