டெஸ்ட் கிரிக்கெட்

ஒரே நாளில் 525 ரன்.. லேடி சேவாக் செபாலி வர்மா இரட்டை சதம்.. இந்திய அணி தெ.ஆ எதிராக அதிரடி

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஏற்கனவே ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் தற்போது இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன.

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியினர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மந்தனா மற்றும் செபாலி வர்மா ஆகியோர் இந்திய அணியின் இன்னிங்சை மிகச் சிறப்பாக தொடங்கினார்கள். இதில் செபாலி வர்மாவின் அதிரடி ஆட்டம் வீரேந்திர சேவாக்கை நினைவுபடுத்தியது. நல்ல பந்துகளை தடுத்து ஆடியும் அதே நேரத்தில் ஏதுவான பந்துகளை பௌண்டரிகளும், சிக்ஸர்களும் ஆக விளாசினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மந்தனாகவும் இதற்கு சளைக்காதவர் போல் அவரும் தனது பந்துக்கு தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்.

இதில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த மந்தனா 161பந்துகளை எதிர்கொண்ட நிலையில், 27 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 149 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக டெல்மி டக்டர் பந்துவீச்சில் டிக்சனிடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக வெளியேறினார். இதனால் ஒரு ரன்னில் 150 ரன்களைத் தவறவிட்டார். இந்த ஜோடி தொடக்க விக்கட்டுக்கு 312 பந்துகளில் 292 ரன்கள் குவித்தது.

- Advertisement -

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான செபாலி வர்மா 197 பந்துகளை எதிர்கொண்டு 23 பௌண்டரிகளையும், 8 சிக்ஸர்களையும் விளாசி 205 ரன்கள் குவித்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி பரிதாபமாக வெளியேறினார். 66 பந்துகளில் அரை சதம் அடித்த செபாலி வர்மா, 113 பந்துகளில் சதம் அடித்தார். பின்னர் 158 பந்துகளில் 150 ரன்களும், 194 பந்துகளில் 200 ரன்களும் குவித்தார். இந்திய பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். அதற்குப் பிறகு ஒன்டவுனில் களம் இறங்கிய மற்றொரு வீராங்கனை சுபா சதீஷ் 27 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளுடன் பதினைந்து ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.

அதற்குப் பின்னர் மிடில் வரிசையில் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரியஸ் 94 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் குவித்தார். தற்போது களத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 42 ரன்களுடனும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஸ் ஒன்பது பவுண்டரிகளுடன் 43 ரன்கள் குவித்து தற்போது களத்தில் இருக்கின்றனர். இதனால் இந்திய அணி 98 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 525 ரன்கள் குவித்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதையும் படிங்க:டிரினிடாட்டில் சிக்கி தவிக்கும் தெ.ஆ அணி.. பைனல் நடக்கும் பார்படாஸுக்கு செல்ல முடியாத சோகம்.. காரணம் என்ன?

இன்னும் கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் இந்திய அணி மிகப்பெரிய இலக்கை தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாபிரிக்க அணித்தரப்பில் பந்துவீச்சில் டெக்கார் இரண்டு விக்கட்டுகளும், கிளர்க் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

Published by