டிரினிடாட்டில் சிக்கி தவிக்கும் தெ.ஆ அணி.. பைனல் நடக்கும் பார்படாஸுக்கு செல்ல முடியாத சோகம்.. காரணம் என்ன?

0
1250
SA

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை இறுதிப்போட்டியில் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாட இருக்கின்றன. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி மற்றும் ஐசிசி ஒளிபரப்பு குழு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி நடைபெற்ற டிரினிடாட்டில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்க அணி டிரினிடாட் பிரையன் லாரா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாடியது. அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை சுருட்டி அனாயசமாக வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக பார்படாஸ் தீவுக்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

இந்த நிலையில் பார்படாஸ் விமான நிலையத்தில் ஒரு சிறிய விமானம் இறங்குவதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அங்கே தற்பொழுது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் பார்படாஸ் காவல் சேவை விசாரணையை துவக்கி இருக்கிறது.

இதனால் வெளியில் இருந்து பார்படாஸ் விமான நிலையத்திற்கு புறப்படக்கூடிய விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக இறுதிப் போட்டியில் விளையாட வேண்டிய தென் ஆப்பிரிக்க அணியும், ஐசிசி ஒளிபரப்பு குழுவும் டிரினிடாட்டில் தற்பொழுது சிக்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் அவர்களுடைய நேரப்படி மாலை விமானம் புறப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது ஆறு மணி நேர தாமதம் ஆகும்.

இது குறித்து பார்படாஸ் விமான நிலையத்தில் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் நிபுணர் ஷர்லின் பிரவுன் கூறும் பொழுது “தனியார் விமானத்தின் தரையிறங்கும் கியர் சரியாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த விமானம் தற்பொழுது பார்பர்டஸ் விமான நிலையத்தில் ஓடுபாதையில் மிகவும் பத்திரமாக தரையறுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : நேத்து போட்டியில பெரிய ஒரு தப்பு பண்ணிட்டேன்.. இந்தளவுக்கு அது மாறும்னு நினைக்கல – ஜோஸ் பட்லர் ஒப்புதல்

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுபோல விமான சேவையில் பிரச்சனைகள் உருவானதால் சில அணிகள் சில மணி நேரங்கள் சிக்கித் தவித்து இருக்கிறார்கள். இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் ப்ளோரிடாவில் எட்டு மணி நேரமும், அரையறுதியில் ஆப்கானிஸ்தான் அணியும் இப்படியான பிரச்சினைகளைச் சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.