டி20 உலகக் கோப்பை 2024

2024 டி20 உ.கோ.. வீரர்கள் மற்றும் அணிகளுக்கான பல பரிசுத்தொகைகள்.. மொத்த முழு விபரங்கள் உள்ளே

நடந்து முடிந்த ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இதில் பலவகையான பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சில விருதுகளுக்கு பரிசுத் தொகைகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அது குறித்து பார்க்கலாம்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பையில் மொத்தம் 20 அணிகளுக்கும் சேர்ந்து 93.80 கோடி பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் தோல்வியடைந்த அணிகளுக்கு மட்டும் இல்லாமல், கலந்துகொண்ட எல்லா அணிகளுக்குமே பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

தற்போது இந்த டி20 உலக கோப்பை தொடரில் 13 முதல் 20 இடங்களுக்குள் வந்த ஒவ்வொரு அணிக்கும் தலா 1.87 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது. 9 முதல் 12 இடங்களுக்குள் வந்த அணிகளுக்கு 2.06 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் சூப்பர் 8 சுற்றுக்கு வந்து வெளியேறிய நான்கு அணிகளில் ஒவ்வொரு அணிக்கும் 3.18 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரையிறுதியில் தோற்று வெளியேறிய இரண்டு அணிகளுக்கும் தல 6.56 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இத்தோடு டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த அணிக்கு 10. 67 கோடி ரூபாயும், டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற அணிக்கு 20.42 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தோடு வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் அந்த அணிக்கு 26 லட்ச ரூபாய் கொடுக்கப்படுகிறது.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் மறக்க முடியாத நிகழ்வு – இந்தியாவுக்கும் விராட் கோலிக்கும் ஷாகின் அப்ரிடி வாழ்த்து

இறுதிப் போட்டியில் சிறந்த கேட்ச் பிடித்த சூரிய குமாருக்கு இந்திய மதிப்பில் 2.5 லட்சம் ரூபாயும், இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலிக்கு 4 லட்ச ரூபாயும், நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வென்ற பும்ராவுக்கு இந்திய மதிப்பில் 12 லட்சம் ரூபாய்க்கு மேலும் கொடுக்கப்பட்டிருக்கிறது!

Published by