டி20 உலகக் கோப்பை 2024

வீரரா எனக்கு அதிர்ஷ்டம் இல்ல.. அடுத்த 5 வருஷம் இந்தியா நிறைய கோப்பைகளை ஜெயிக்கும்.. டிராவிட் உணர்ச்சி வசம்

11 வருடங்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தொடரை டி20 உலகக் கோப்பை மூலமாக வென்று இந்த ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளராக தனது வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்திருக்கும் ராகுல் டிராவிட் இந்திய அணி இன்னும் இதுபோல பல கோப்பைகளை வெல்ல வேண்டும் என்றும் மேலும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ரவி சாஸ்திரியின் பதவி விலகலுக்கு பிறகு, இந்தியாவின் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார். அவரது தலைமையில் இந்திய அணி 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையிலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்தார்.

டிராவிட் இந்திய அணிக்காக விளையாடிய காலகட்டங்களில் ஐசிசி கோப்பையை வெல்லாத இந்திய அணி, அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாக அவருக்காக இந்த உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். தற்போது இதனை நிறைவேற்றும் காட்டியுள்ளனர். இந்த இறுதிப் போட்டிக்கு பிறகு டிராவிட் இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பான திறமைகள் நிறைய உள்ளன. வீரர்களின் தன்னம்பிக்கையும், ஆற்றலும் வேற லெவலில் இருக்கிறது. இந்திய அணி அடுத்த ஐந்து ஆறு ஆண்டுகளில் பல கோப்பைகளை வெல்லும். இது ஒரு இரண்டு வருட பயணம். 2021ஆம் ஆண்டில் இருந்தே இந்திய அணியின் கட்டுமானம், வீரர்களின் திறன், மற்றும் நாங்கள் விரும்பிய வீரர்கள் குறித்து விவாதித்தோம். இந்த இரண்டு வருட பயணத்தில்தான் தற்போது உலகக் கோப்பை எங்களுக்கு கிடைத்திருக்கிறது.

ஒரு வீரராக உலகக் கோப்பையை வெல்ல எனக்கு அதிர்ஷ்டம் இல்லை ஆனாலும் அப்போது என்னால் முடிந்தவற்றை அணிக்காக கொடுத்தேன். ஒரு அணிக்காக நான் பயிற்சியாளராக செயல்பட்டதில் நான் ஒரு அதிர்ஷ்டசாலி. இந்த சிறுவர்கள் கூட்டம் அதை எனக்கு வென்று கொடுத்ததில் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இது ஒரு மிகச் சிறப்பான உணர்வு. ஒரு பயிற்சியாளராக எனது வேலையை சரியாக செய்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:இதிலிருந்து என்னால் மீள முடியாது.. மனது வலிக்கிறது.. குறிப்பிட்ட இடத்தில்தான் போட்டியை தவற விட்டோம்- மார்க்ரம் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரர்களைக் கொண்டு அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கு இந்திய இளம் அணியின் கேப்டனாக தலைமை தாங்க உள்ளார். ராகுல் டிராவிட்டின் விலகலுக்குப் பிறகு இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by