டி20 உலகக் கோப்பை 2024

இதிலிருந்து என்னால் மீள முடியாது.. மனது வலிக்கிறது.. குறிப்பிட்ட இடத்தில்தான் போட்டியை தவற விட்டோம்- மார்க்ரம் பேட்டி

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பாக வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்கரம் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இவருக்கு அடுத்தபடியாக அக்சார் பட்டேல் 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். சிவம் துபே கடைசி கட்டத்தில் களம் இறங்கி பதினாறு பந்துகளில் 27 ரன்கள் குவிக்க இந்திய அணி ஓரளவு சவாலான ஸ்கோரை தென்னாப்பிரிக்க அணிக்கு நிர்ணயித்தது.

இதற்குப் பிறகு களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய டி காக் 39 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கிளாசன் 27 பந்துகளில் 52 ரன்கள் குவித்த நிலையில், எதிர்பாராத விதமாக ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் வெளியேற இறுதியாக தென்னாப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 169 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இரண்டாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த தோல்விக்கு பிறகு தென்னாபிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் தோல்வி குறித்து சில முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் “இந்த தோல்வியிலிருந்து மீண்டு வர எங்களுக்கு சில நேரங்கள் தேவைப்படும். மனது வலிக்கிறது. இந்தத் தொடரில் எங்கள் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். மைதானத்திற்கு ஏற்றவாறு நாங்கள் நன்றாக தயாராகவில்லை என்று நினைக்கிறேன். இந்திய அணியை குறைவான ரன்களில்தான் சுருட்டினோம். இந்த இலக்கு எங்களால் நிச்சயமாக எட்டியிருக்க முடியும்.

நாங்கள் பேட்டிங்கிலும் நன்றாகவே செயல்பட்டோம். இறுதி கட்டத்தில் நாங்கள் செய்த சிறு தவறுகளால் தான் எங்களால் மீள முடியவில்லை. நிச்சயம் கிரிக்கெட்டுக்கு இது ஒரு நல்ல நாளாக இருந்திருக்கும். இந்த டி20 தொடரை பொருத்தவரை பெரும்பாலான போட்டிகள் நாங்கள் கடைசி பந்து வரை சென்று வெற்றி பெற்றிருக்கிறோம். இந்தத் தொடர் முழுவதுமாக பார்த்தால் நாங்கள் எந்த போட்டியையும் எளிதாக வெற்றி பெறவில்லை. ஒவ்வொரு போட்டிக்கும் கடுமையாக போராடி வேண்டி இருந்தது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டிய சமயத்தில் கடைசி கட்டத்தில் நாங்கள் பேட்டிங்கில் செய்த சிறு தடுமாற்றமே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க:2024 டி20 உ.கோ.. வீரர்கள் மற்றும் அணிகளுக்கான பல பரிசுத்தொகைகள்.. மொத்த முழு விபரங்கள் உள்ளே

இந்த போட்டியின் மூலம் எங்களாலும் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நாங்கள் நிரூபித்து இருக்கிறோம். தென் ஆப்பிரிக்க நாட்டினர் எங்கு இருந்தாலும் கடுமையான சவால்களை அளிக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். டி20 தொடரில் இதன் மூலமாக எங்களுக்கு நல்ல விஷயங்கள் அமைந்திருக்கிறது. நிச்சயம் இனி வரும் தொடர்களில் மீண்டு வருவோம். இந்தத் தொடரில் நாங்கள் இறுதிப்போட்டி வரை வந்து விளையாடியது எங்களுக்கு பெருமையான விஷயம்தான்” என்று கூறி இருக்கிறார்.

Published by