“கில் ருத்ராஜுக்கு இடையே சண்டை ஆரம்பிச்சுடுச்சு.. இனி அங்க போய்தான் முடியும்!” – இந்திய முன்னாள் வீரர் அதிரடி பேச்சு!

0
2300
Ruturaj

அடுத்த ஆண்டு 2024 ஜூலை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர்நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணிக்கு ஒரு ஆரோக்கியமான தலைவலி ஆரம்பித்திருக்கிறது.

அது என்னவென்றால், தற்பொழுது டி20 இந்தியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில், ருதுராஜ், ஜெய்ஸ்வால் இஷான் கிஷான் என ஐந்து பேர் இருக்கிறார்கள்.

- Advertisement -

இவர்களில் மூன்று பேருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க முடியும். குறிப்பாக இசான் கிஷான் இரண்டாவது விக்கெட் கீப்பராக அணிக்கு தேர்வாகிவிட்டால், மீதமுள்ள நான்கு பேரில் இருவருக்கு மட்டுமே இடம் உண்டு.

இதில் தற்பொழுது ஜெய்ஷ்வால் தன்னுடைய இடத்தை இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் அதிரடியான ஆட்டம் முறையில் காரணமாக தக்க வைத்திருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். எனவே மற்ற மூன்று பேரில் இருந்து ஒருவருக்கு மட்டுமே அணியில் இடம் கிடைக்கும். அது யார்? என்பதுதான் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் ஆரோக்கியமான தலைவலி!

இதுகுறித்து இன்றிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ருத்ராஜ் தானும் இருக்கிறேன் என்று காட்டிவிட்டார். கில் போலவே அவரும் ஆடுவதால் இருவருக்கும் இடையே நேரடியான சூட் அவுட் ஆரம்பித்துவிட்டது. ரோகித் சர்மாவும் வருவார். எனவே இந்த மூன்று பேரில் இருந்து நீங்கள் அதிகபட்சம் இரண்டு பேருக்கு மட்டுமே வாய்ப்பு தர முடியும்.

- Advertisement -

எனவே தற்போது ருத்ராஜ் எடுத்துள்ள ரன்கள் மிக முக்கியமானது. அவர் இதேபோன்று தொடர்ச்சியாக ரன்கள் எடுக்க வேண்டும். இது நடக்கும் பொழுது உலகக்கோப்பை நேரத்தில் நீங்கள் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உண்டு. டி20 கிரிக்கெட்டில் ருத்ராஜ் மற்றும் கில் இருவரும் ஒரே மாதிரி விளையாடுகின்ற காரணத்தினால், இருவரில் ஒருவரை நீங்கள் அணியில் வைத்துக் கொள்ளலாம்.

ஜெய்ஸ்வால் போதுமான ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் ஓபனிங்கில் ரைட் லெப்ட் காம்பினேஷன் தருகிறார். அவர் இந்த ஐந்து போட்டிகளில் நன்றாக விளையாடிய போதிலும் இன்னும் கொஞ்சம் ரன்கள் எடுத்திருக்கலாம்.

ஜெயஸ்வால் ஆக்ரோஷமான ஒரே பாணியில் டி20 கிரிக்கெட் விளையாடுகிறார். அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டையும் எப்படி விளையாடுவது என்று தெரியும். மேலும் எதிர்காலத்தில் அவர் ஒருநாள் கிரிக்கெட்டும் விளையாடுவார். எனவே அவருடைய வேலையை சரியாக செய்திருக்கின்ற காரணத்தினால், அவருடைய பெயரை அழுத்தமாக பதிவு செய்துவிட்டார்!” என்று கூறியிருக்கிறார்!