இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் தங்களின் லீக் சுற்றின் கடைசி போட்டியில் விளையாடியது, பல சர்ச்சைகளை தூண்டி இருக்கிறது. இதில் ஒரு பகுதியாக விராட் கோலி களத்தில் செயல்பட்ட விதம் குறித்து ஹைடன் விமர்சனம் செய்திருக்கிறார்.
குறிப்பிட்ட இந்தப் போட்டியில் வழக்கத்தை விட விராட் கோலி அதிகபட்ச ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார். இது பேட்டிங் செய்யும்பொழுது இருந்தே இருந்தது. இதற்கு அடுத்து பந்துவீச்சின் பொழுது அவர் மைதானத்தில் இருந்த ரசிகர்களை பார்த்து வாயின் மீது விரல் வைத்து காட்டினார். மேலும் சிஎஸ்கே வீரர்கள் ஆட்டம் இழக்கும் பொழுது அதிகப்படியான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
இத்துடன் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த பிறகு மகேந்திர சிங் தோனி வரிசையில் முன் வந்து நின்று கை கொடுப்பதற்கு தயாராக இருந்தார். ஆனால் ஆர்சிபி வீரர்கள் வெகு நேரம் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இதன் காரணமாக மகேந்திர சிங் தோனி சலிப்புடன் அங்கிருந்து கை கொடுக்காமல் சென்று விட்டார்.
இத்தோடு பந்து அதிகம் ஈரமாகிறது எனவே மாற்றிக் கொடுக்க வேண்டும் என ஆர்சிபி கேப்டன் நடுவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு நடுவர்கள் தங்களால் இப்பொழுது பந்தை மாற்றி கொடுக்க முடியாது பந்து நன்றாகத்தான் இருக்கிறது என்று திருப்பி பதில் சொன்னார்கள்.
இந்த நேரத்தில் கேப்டன் ஆகவும் இல்லாமல் பந்துவீச்சாளராகவும் இல்லாமல் இருக்கும் விராட் கோலி நடுவில் புகுந்து நடுவர்களுடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முதலில் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விலக, மீண்டும் திரும்ப வந்து பார்க்க வாரத்தில் ஈடுபட்டார். ஆனால் இதற்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படாத ஆச்சரியமாக உள்ளது.
இதையும் படிங்க : கம்பீர்தான் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரா?.. நிச்சயமா சரி வராது – ஆகாஷ் சோப்ரா பேட்டி
இந்த நிலையில் மேத்யூ ஹைடன் இது குறித்து கூறும் பொழுது ” விராட் கோலி களத்தில் அதிகப்படியான இடையூறுகளை செய்தார். அவர் இப்படி செய்தது சரி கிடையாது. மேலும் பந்து மாற்றிக் கொடுக்கும்படி அவர் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன் கிடையாது. அது அவருடைய வேலை கிடையாது” என்று கூறி இருக்கிறார்.