டி20 உ.கோ-ல இந்திய அணிக்கு ஒரு ஸ்பெஷல் தலைவலி இருக்கு.. இத சரி பண்ணி ஆகனும் – சுரேஷ் ரெய்னா பேட்டி

0
293
Raina

இந்தியாவில் நடைபெற்று வரும் 17ஆவது ஐபிஎல் சீசனில் லீக் சுற்று முடிவுக்கு வந்திருக்கிறது. நாளை முதல் பிளே ஆப் சுற்று ஆரம்பிக்கிறது. முதல் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இதற்கு அடுத்து உடனே துவங்கும் டி20 உலகக் கோப்பை குறித்து சுரேஷ் ரெய்னா பேசியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடர் இந்த மாதம் மே 26ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவின் டி20 உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த முறை இரண்டு நாடுகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதில் இந்திய அணிக்கு அமெரிக்கா மிகவும் புதிய ஒரு சூழ்நிலை. மேலும் வெள்ளைப்பந்து போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் மண்ணில் இந்திய அணி காலை 10 மணி முதல் விளையாட இருக்கிறது. எனவே இடம் மற்றும் நேரம் என இரண்டுமே இந்திய அணிக்கு புதிய சவால்களை கொடுக்க இருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி சமநிலையில் இருக்கிறது. இதற்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்கிறார். மேலும் விராட் கோலி நல்ல பார்மில் இருந்து வருகிறார். இரண்டு இடதுகை வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பவர் பிளேவில் பந்து வீசுவார்கள். அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இருக்கிறார்கள்.

இந்திய அணி இந்த அளவில் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கூட, போட்டிகள் அங்கு காலை 10 மணிக்கு ஆரம்பிக்கிறது. இந்த நேரத்தில் ஆடுகளம் டிராப் இன் ஆகும். இதன் காரணமாக அங்கிருக்கும் ஆடுகளங்கள் மற்றும் நேரத்திற்கு தகுந்தவாறு இந்திய அணியினர் வெகு வேகமாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி ஓய்வு குறித்து எப்பொழுது அறிவிப்பார்.. சிஎஸ்கே காசி விஸ்வநாதன் வெளியிட்ட புதிய தகவல்

ஹர்திக் பாண்டியா உண்மையிலேயே இந்திய அணிக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். தற்காலிகமாக அவர் பார்மில் இல்லை என்பது அவரை மோசமான வீரராக மாற்றி விடாதே. இதே உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சிறப்பாக செயல்படும் போது எல்லோரும் அவரை பாராட்டுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.