தோனி ஓய்வு குறித்து எப்பொழுது அறிவிப்பார்.. சிஎஸ்கே காசி விஸ்வநாதன் வெளியிட்ட புதிய தகவல்

0
1087
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று 14 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில் தோனி எப்பொழுது ஓய்வு பெறுவார் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தரப்பில் புதிய தகவல் கூறப்பட்டிருக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாக தோனி முழங்கால் அறுவை சிகிச்சை செய்திருந்தார். அந்த அறுவை சிகிச்சை சரியாகி அவர் முழு உடல் தகுதி பெற்று இருந்தார். ஆனால் ஐபிஎல் தொடருக்கு சில நாட்கள் இருக்கும்பொழுது அவருக்கு தசைக் கிழிவு ஏற்பட்டது.

- Advertisement -

இதன் காரணமாக தோனி வலியுடன் தான் விளையாட வேண்டி இருந்தது. மேலும் இந்த பிரச்சனையால் அவர் பேட்டிங் வரிசையில் சில நேரத்தில் ஒன்பதாவது இடத்தில் வந்தார். அவர் தாமதமாக பேட்டிங் செய்ய வருவது வெளியில் பெரிய விமர்சனங்களை உருவாக்கியது. இர்பான் பதான், ஹர்பஜன்சிங் போன்றவர்கள் தோனி சிஎஸ்கே அணிக்கு விளையாடியது போதும் என்கின்ற அளவில் பேசினார்கள்.

அதே சமயத்தில் இரண்டாவது விக்கெட் கீப்பரான கான்வே காயத்தின் காரணமாக சிஎஸ்கே அணிக்கு விளையாட முடியாதது பெரிய பின்னடைவாக அமைந்தது. இல்லையென்றால் கான்வே விளையாட தோனி ஓய்வு எடுத்து இருப்பார் என்று சிஎஸ்கே தரப்பில் கூறப்பட்டது.

தற்பொழுது இது குறித்து சிஎஸ்கே அணிக்கு நீண்ட காலமாக சிஇஓ பொறுப்பில் இருந்து வரும் காசி விஸ்வநாதன் கூறும் பொழுது “அவர் எங்களிடம் எதுவும் கூறவில்லை. அவர் இப்படியான விஷயங்களை எங்களிடம் எப்பொழுதும் கூற மாட்டார். அது குறித்து அவர்தான் முடிவெடுப்பார்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி நீங்க ஒன்னும் கேப்டன் கிடையாது.. இதெல்லாம் ரொம்ப தப்பு – மேத்யூ ஹைடன் விமர்சனம்

அதே சமயத்தில் சிஎஸ்கே அணியின் இன்னொரு அதிகாரி இது குறித்து ஒரு நம்பிக்கை பூர்வமான தகவலை கூறியிருக்கிறார். அதில் ” தோனி சிஎஸ்கே அணியில் இருந்து விலகுவதாக யாரிடமும் எந்த விதமான தகவலையும் கூறவில்லை. அதே சமயத்தில் இறுதி முடிவை எடுப்பதற்கு தற்போது தமக்கு இரண்டு மாதங்கள் தேவைப்படுவதாக கூறியிருந்தார்” என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அடுத்த இரண்டு மாதத்தில் தோனி தன்னுடைய ஓய்வு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.