இந்தியா எடுக்க வேண்டிய முடிவு.. வசதியாக்கி தந்த ஆஸ்திரேலியா.. பரபரப்பான உலக கோப்பை இறுதிப்போட்டி!

0
770
Rohit

இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு டாஸ் நிகழ்வு தற்பொழுது நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது.

வழக்கம்போல் ரவி சாஸ்திரி தொகுத்து வழங்க ரோஹித் சர்மா நாணயத்தை சுண்டினார். ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் கேட்டபடி ஹெட் விழ, கம்மின்ஸ் தற்பொழுது பந்துவீச்சை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

- Advertisement -

இன்று போட்டி நடைபெறுகின்ற ஆடுகளம் ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட ஆடுகளம் ஆகும். ஆரம்பத்தில் பெரிதாக வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு இல்லை. அதே சமயத்தில் இரண்டாம் பகுதியில் சுழற் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.

தற்போது குஜராத் அகமதாபாத் ஆடுகளத்தை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்வதா அல்லது இரண்டாவது பேட்டிங் செய்வதாக என்பது குழப்பமான ஒரு விஷயமாகத்தான் இருந்து வருகிறது. இரண்டிலும் சாதக பாதகங்கள் உண்டு.

இப்படி இருந்த நிலையில் இந்தியா டாஸ் வெல்லாதது நல்லது என்று பார்க்கப்படுகிறது. அதாவது எந்த முடிவாக இருந்தாலும் அதை ஆஸ்திரேலியாவை எடுப்பது நல்லது. இந்த மாதிரியான நேரத்தில் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது கூடுதல் அழுத்தத்தை தடுக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் விளையாடிய அதே அணிகளை கொண்டு களம் இறங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் வழக்கம் போல் கொடுக்கப்படவில்லை.

டாஸ் நிகழ்வில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது “நான் டாஸ் வென்று இருந்தாலும் முதலில் பேட்டிங்தான் செய்திருப்பேன். இது நல்ல ஆடுகளமாக இருக்கிறது. ஸ்கோர் போர்டில் பெரிய ரண்களை போட வேண்டும்.

இங்கு விளையாடும் ஒவ்வொரு முறையும் கூட்டம் பெரிய அளவில் வருகிறது. இது கிரிக்கெட்டில் மிகவும் பெரிய நிகழ்வு. எனவே நாம் மிக அமைதியாக இருக்க வேண்டும்.

இப்படியான இறுதிப்போட்டியில் கேப்டனாக இருக்கின்ற கனவு நனவாகி இருக்கின்றது. எங்களுக்கு முன்னால் என்ன இருக்கிறது என்று நன்றாகவே தெரியும். நாம் நன்றாக விளையாடி முடிவைப் பெற வேண்டும். களத்தில் சரியான முடிவுகளை எடுக்க நாங்கள் பத்து ஆட்டங்களில் என்ன செய்தோமோ அதையே செய்ய வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!