“ஆஸியை பைனலில் தோற்கடிப்போம்.. உலக கோப்பையை நாட்டுக்கு கொண்டு வருவோம்” – U19 இந்திய கேப்டன் உறுதி

0
258
ICT

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வருகின்ற பிப்ரவரி மாதம் 11-ம் தேதி நடக்க இருக்கிறது.

இந்த போட்டியில் முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியாவும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானில் வீழ்த்திய ஆஸ்திரேலியாவும் மோதிக் கொள்ள இருக்கின்றன.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங் ஆர்டர் எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ அதேபோல பந்துவீச்சு குழுவும் மிகவும் வலிமையானதாக இருக்கிறது.

இந்த தொடரில் 389 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் உதய் சகரன் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்திலும் இந்திய அணி வீரர் முசிர்கான் இருக்கிறார்.

மேலும் தென்னாபிரிக்காவில் மெதுவான மைதானங்கள் என்பதால் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சு நன்றாக ஈடுபட்டு பின்பு சுழல் பந்துவீச்சுக்கு சிறப்பானதாக இருக்கும்.

- Advertisement -

இந்திய அணியில் இதை பயன்படுத்திக் கொள்ள நல்ல வேக பந்துவீச்சாளர்கள் மற்றும் நல்ல சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். மேலும் முசிர் கான் போன்று மிகத் திறமையாக பந்து வீசக்கூடிய பகுதிநேர சுழற் பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இறுதி போட்டி குறித்து பேசி உள்ள இந்திய கேப்டன் உதய் சகரன் ” இந்தத் தொடரை வெல்வது எங்கள் எல்லோருக்கும் ஒரு கனவு ஆகும். எங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை மட்டுமே கிடைக்கும்.எனவே வரலாற்றை மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

மேலும் வரலாற்றில் எங்கள் பெயரை பதிவு செய்ய விரும்புகிறோம். எங்களால் தர முடிந்த சிறந்ததை தருவதில் கவனம் செலுத்துகிறோம். இதேபோன்று தொடர்ந்து ஆதரவு தருமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். உலகக் கோப்பையை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவர நான் உறுதியளிக்கிறேன்.

எங்கள் அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு முக்கிய காரணம், எங்கள் அணியில் வீரர்களிடையே நல்ல பிணைப்பு இருக்கிறது. அனைவரும் ஒருவரை ஒருவர் நம்புகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய தயாராக இருக்கிறார்கள். இதனால் எங்களுடையசெயல்பாடு சிறப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க : U19 WC பைனல்.. இந்தியா ஆஸி மோதல்.. 2023 WC தோல்விக்கு இந்திய இளைஞர் படை பதிலடி தருமா? போட்டி எப்பொழுது?

நாங்கள் எந்த அணி உடன் போட்டியிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது இல்லை. நாங்கள் எங்களுடைய சொந்த விளையாட்டில் கவனம் செலுத்துகிறோம். நாங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு திட்டத்தை உருவாக்குகிறோம். நாங்கள் எல்லா போட்டியையும் மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.