“உலகின் சிறந்த கிரிக்கெட் லீக் ‘ஐபிஎல்’ தான்…. நமது கிரிக்கெட் வாரியம் இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” – பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சர்ச்சை பேட்டி!

0
819

உலகம் முழுவதும் பல்வேறு வகையான டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு முன்னோடியாக விளங்குவது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படும் இந்தியன் பிரிமியர் லீக். ஐபிஎல் போட்டிகள் தான் t20 லீக்குகளில் மிகப்பெரிய திருவிழாவாக நடைபெறும் போட்டி தொடராகும். இதில் உலக நாடுகள் முழுவதிலும் இருந்து முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்திய அணியின் வீரர்களை வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் பிசிசிஐ நிர்வாகம் விளையாட அனுமதி மறுப்பது தொடர்பாக பல்வேறு வகையான சர்ச்சை கருத்துக்கள் நிறைவு வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்தியா அணியின் தோல்விக்கு கூட வீரர்களை வெளிநாட்டில் போட்டிகளில் விளையாட அனுமதி மறுப்பது ஒரு காரணமாக விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனத்திற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட பதில் அளித்திருந்தார்.

- Advertisement -

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் வருகின்ற மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. தற்போது பாகிஸ்தானில் பி எஸ் எல் டி20 கிரிக்கெட் தொடரின் எட்டாவது சீசன் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மலிடம் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார் பத்திரிக்கையாளர் ஒருவர்.

இதற்கு பதில் அளித்து பேசிய கம்ரான்” இந்திய வீரர்கள் பிஎஸ்எல் போட்டித் தொடர்களில் விளையாட கூடாது என பதிலளித்தார். மேலும் இதுபற்றி தொடர்ந்து பேசிய கம்ரான் அக்மல் பிசிசிஐ மிகச் சரியான முடிவை எடுத்திருக்கிறது. ஏனென்றால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இரண்டு மாதம் நடைபெறுகிறது அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன மேலும் இந்திய வீரர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பலமாக இருக்கின்றனர். அதனால் மற்ற நாடுகள் நடத்தும் டி20 லீக்கிகளில் அவர்கள் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை”என கூறினார்.

மேலும் இதுபற்றி தொடர்ந்து பேசிய கம்ரான் அக்மல்” நமது கிரிக்கெட் வாரியமும் அவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்திய அணியில் 10 முதல் 15 வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகளை கடந்து ஆடி இருக்கிறார்கள். ஆனால் நமது நாட்டில் ஒன்று அல்லது இரண்டு வீரர்களால் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளை கடந்து ஆட முடிந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதன் கிரிக்கெட் மற்றும் வீரர்கள் மீது அதிக அக்கறை எடுத்து செயல்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வீரர்களுக்கு அதிகமான வருவாயை கொடுக்கிறது . ஐபிஎல் கிரிக்கெட் உடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடர் ஒரு பொருட்டே இல்லை . மேலும் உலகின் எந்த ஒரு கிரிக்கெட் லீக் தொடரும் ஐபிஎல் க்கு இணையாகாது” எனக் கூறி முடித்தார் கம்ரான் அக்மல் .

- Advertisement -

கம்ரான் அகமல் ஐபிஎல் போட்டி தொடர்களில் முதலாவது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் சீசனில் சேன்வார் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணியில் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த கம்ரான் அகமல் மற்றும் சுகைல் தன்வீர் ஆகிய இரண்டு வீரர்கள் இடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் சுகைல் தன்வீர் என்பது குறிப்பிடத்தக்கது.