ஹர்திக் பாண்டியா செய்த தவறு.. மும்பை தோல்வி.. சிஎஸ்கேவை கீழே இறக்கி டெல்லி புள்ளி பட்டியலில் முன்னேற்றம்

0
3053
IPL2024

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணியை வென்று, டெல்லி அணி புள்ளி பட்டியலில் முன்னேறி இருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தது. டெல்லி அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடியான துவக்கத்தை கொடுத்தார். 15 பந்துகளில் அரை சதம் அடித்த அவர், மொத்தம் 27 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இன்றைய போட்டியில் துவக்க ஆட்டக்காரராக வந்த அபிஷேக் போரல் 27 பந்தில் 36 ரன்கள், ஷாய் ஹோப் 17 பந்தில் 41 ரன்கள், ரிஷப் பண்ட் 19 பந்தில் 29 ரன்கள், ஸ்டப்ஸ் 25 பந்தில் 48* ரன்கள் எடுக்க, டெல்லி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. பும்ரா நான்கு ஓவர்களில் 35 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

புள்ளி பட்டியலில் முன்னேறிய டெல்லி அணி

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 8 பந்தில் 8 ரன்கள், இசான் கிஷான் 14 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து சூரியகுமார் யாதவ் 13 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த முறை அதிரடியாக விளையாடி 24 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். ஓவருக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 17 பந்தில் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி இரண்டு ஓவர்களில் 41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முகமது நபி 4 பந்தில் 7 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் கடைசி ஓவருக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரின் முதல் பந்தில் நம்பிக்கை அளித்த திலக் வர்மா 32 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கனவு முடிவுக்கு வந்தது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் மட்டும் எடுத்தது. டெலி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுக்காமல் ஹர்திக் பாண்டியா செய்த தவறு மும்பை அணி வெற்றியை பாதித்திருக்கிறது.

இதையும் படிங்க : 4,4,6,4,4,4.. பொளந்து கட்டிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.. பிரமித்து போய் நின்ற ரிஷப் பண்ட்.. டெல்லி காட்டடி

டெல்லி அணி தற்பொழுது 10 போட்டியில் 5 போட்டிகளை வென்று 10 புள்ளிகள் பெற்று 5வது இடத்திற்கு புள்ளி பட்டியலில் முன்னேறி இருக்கிறது. தற்பொழுது 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன், புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் சிஎஸ்கே அணி வெல்ல வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது.