“வெறித்தனமா இருக்காதிங்க.. ப்ளீஸ் டைம் அவுட் பிரச்சினையில் இருந்து வெளியே வாங்க” – இலங்கை அணிக்கு பங்களாதேஷ் கேப்டன் அறிவுரை

0
562
Srilanka

உலக கிரிக்கெட்டில் சில ஆண்டுகளாக மிகப்பெரிய எதிரிகள் போன்று இலங்கை அணியும் பங்களாதேஷ அணியும் மோதி வருகின்றன. இதற்கு முதல் விதையை தூவியது பங்களாதேஷ் அணியாகவே இருந்திருக்கிறது. பங்களாதேஷ் அணிக்கு எதிர்வினை செய்ய இலங்கை சில போட்டிகளில் இறங்கியது.

மேலும் இந்தியாவில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதி கொண்ட பொழுது, கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக டைம் அவுட் முறையில் இலங்கை அணியின் வீரர் ஏஞ்சலோ மேத்யூ பங்களாதேஷ் அவுட் செய்து வெளியே அனுப்பி வைத்தது.

- Advertisement -

இந்த விவகாரத்தின் போது அப்போதைய கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இடம் ஏஞ்சலோ மேத்யூஸ் எவ்வளவு தூரம் கேட்டுக் கொண்டும், அவர் அந்த முடிவிலிருந்து பின் வாங்க மாட்டேன் என உறுதியாக கூறிவிட்டார். இதன் காரணமாக பரிதாபமாக ஏஞ்சலோ மேத்யூஸ் வெளியேறினார்.

இதற்குப் பின்பு இலங்கை அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட பங்களாதேஷ் செல்கிறது என்கின்ற செய்தி வந்த பொழுதே, இரு அணிகளுக்கும் இடையே களத்தில் எவ்வாறு சூடான நிலைமை நிலவும் என பலரும் எதிர்பார்ப்பாக காத்திருந்தார்கள்.

இதற்கு ஏற்றார் போல் இரு அணிகளும் மோதிய டீ20 தொடரின் முதல் போட்டியில் விக்கெட்டை வீழ்த்தி விட்டு பங்களாதேஷ் வீரர் சோரிப்புல் இஸ்லாம் கை மூலம் டைம் அவுட் நிகழ்வை மீண்டும் ஞாபகப்படுத்தி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பங்களாதேஷில் வைத்து அந்த அணிக்கு எதிராக இரண்டுக்கு ஒன்று என இலங்கை அணி கைப்பற்றி இருக்கிறது. தொடரைக் கைப்பற்றிய பிறகு பங்களாதேஷ் அணிக்கு பதிலடி தரும் விதமாக டைம் அவுட் செலிப்ரேஷனை இலங்கை அணி செய்தது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் பங்களாதேஷ் கேப்டன் நஜீபுல் சாந்தோ கூறும்பொழுது “இது ஆக்ரோஷமாக ஒன்றை கையாளுவது அல்லது எது குறித்தும் கிடையாது. அவர்கள் டைம் அவுட் சைகை செய்து செலிப்ரேஷன் செய்தார்கள். இதன் மூலம் அவர்கள் அதிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை என்று தெரிகிறது.

இதையும் படிங்க : 111 to 224.. 37 பந்தில் லார்ட் சர்துல் மிரட்டல்.. ரஞ்சி பைனலிலும் அதிரடி.. தப்பிய மும்பை அணி

இலங்கை அணி அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் உலகக்கோப்பையில் விதிகளுக்கு உட்பட்டு தான் டைம் அவுட் முறையில் அவுட் செய்தோம். ஆனால் அது குறித்து வெறித்தனமாக இருக்கிறார்கள். நான் இதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை” எனக் கூறியிருக்கிறார்.