111 to 224.. 37 பந்தில் லார்ட் சர்துல் மிரட்டல்.. ரஞ்சி பைனலிலும் அதிரடி.. தப்பிய மும்பை அணி

0
715
Shardul

தற்பொழுது மும்பை வான்கடை மைதானத்தில் இந்த ஆண்டு ரஞ்சி டிராபி சீசனின் இறுதிப்போட்டி மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற விதர் பா பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் அங்கிருந்து 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணிக்கு பிருதிவி ஷா 46, பூபேன் லல்வாணி 37, முஷீர் கான் 6, கேப்டன் ரகானே 7 ஸ்ரேயாஸ் ஐயர் 7, ஹர்திக் தாமூர் 5 என மும்பை அடி 11 ரன்களுக்கு முக்கிய 6 விக்கெட்டுகளை இழந்து விட்டது.

இந்த நிலையில் ரஞ்சி அரையிறுதியில் தமிழகத்திற்கு எதிராக இதே போல் நெருக்கடியான நிலையில் களம் இறங்கி, சதம் அடித்து மும்பை அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்த சர்துல் தாகூர் இறுதிப் போட்டியிலும் களம் இறங்கி அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.

- Advertisement -

ஒரு பக்கத்தில் சாம்ஸ் முலானி 13, தனுஷ் கோட்டியன் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆனால் தனியாக போராடிய சர்துல் தாக்கூர் அதிரடியாக 37 பந்தில் அரை சதம் அடித்து மிரட்டினார். இதற்கு அடுத்து அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த துஷார் தேஷ்பாண்டே 14 ரன்கள் எடுத்த நிலையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

இறுதியாக சிறப்பாக விளையாடிய சர்துல் தாக்கூர் 69 பந்துகளில் எட்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 75 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவரில் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதையும் படிங்க : ரஞ்சி பைனல்.. மும்பையை பேட்டிங்கில் கவிழ்த்த ரகானே ஸ்ரேயாஸ்.. சச்சின் கோபமான பதிவு

விதர்பா அணியின் தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் ஹர்ஸ் துபே 3, வேகப்பந்துவீச்சாளர் யாஸ் தாக்கூர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். தொடர்ந்து மும்பை அணியின் மேல் வரிசை நட்சத்திர பேட்ஸ்மேன்கள் பிரிதிவிஷா, கேப்டன் ரகானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மூவரும் சொதப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -