இந்தியா டெஸ்ட்.. பங்களாதேஷ் அணி அறிவிப்பு.. உள்நாட்டு டி20 பிளேயர் சேர்ப்பு.. முக்கிய வீரர் விலகல்.. கோப்பை குறி

0
431
Bangladesh

இந்த மாதத்தில் பங்களாதேஷ் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு சற்று முன்பு 16 பேர் கொண்ட அணியை பங்களாதேஷ் கிரிக்கெட் அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டியையும் வென்று பங்களாதேஷ் அணி சரித்திர சாதனை கடந்த வாரங்களில் படைத்திருந்தது. தற்பொழுது இந்திய அணிக்கு எதிராகவும் அந்த உத்வேகத்தை தொடர பங்களாதேஷ் அணி வரவிருக்கிறது.

- Advertisement -

16 பேர் கொண்ட அணி

தற்பொழுது இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் பங்களாதேஷ் அணிக்கு நஜ்முல் சாந்தோ கேப்டன் ஆக தொடர்கிறார். மேலும் அனுபவ வீரர்கள் ஷாஹிப் அல்ஹசன் மற்றும் முஸ்பிகியூர் ரஹீம் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். மேலும் மெஹதி ஹசன் மிராஸ் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய நட்சத்திர வீரர்களும் இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் தொடரில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் நாகித் ராணா எதிர்பார்த்தபடியே இந்தியா வருகிறார். மிக முக்கியமான இடது கை வேகம் பந்துவீச்சாளர் சோரிப்புல் இஸ்லாம் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் சரியாகாமல் இடம் பெறவில்லை. மேலும் பாகிஸ்தான் தொடரில் இடம் பெறாத தொடக்க ஆட்டக்காரர் மக்மதுல் ஹசன் ஜாய் மீண்டும் வந்திருக்கிறார்.

- Advertisement -

டி20 மட்டுமே விளையாடிய வீரர்

இந்த நிலையில் உள்நாட்டு கிரிக்கெட்டில் டி20 வடிவத்தில் மட்டுமே 17 போட்டிகள் விளையாடி இருக்கும் 26 வயதான ஜாக்கர் அலி அணி பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அறிமுகமாகிறார். இவர் விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது விக்கெட் கீப்பராக இருப்பார் என்பதால் விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம்.

இதையும் படிங்க : ருதுராஜ் போட்டிக்கு திட்டமிட்டு நேரடி ஒளிபரப்பு இல்லையா.. ஏன் திடீரென வெளியேறினார்? – பிசிசிஐ மீது ரசிகர்கள் விமர்சனம்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு 16 பேர் கொண்ட பங்களாதேஷ் அணி :

நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, டஸ்கின் அகமத், ஹசன் மஹ்முத், சையத் காலித் அகமது மற்றும் ஜாக்கர் அலி அனிக்.

- Advertisement -