ருதுராஜ் போட்டிக்கு திட்டமிட்டு நேரடி ஒளிபரப்பு இல்லையா.. ஏன் திடீரென வெளியேறினார்? – பிசிசிஐ மீது ரசிகர்கள் விமர்சனம்

0
310
Ruturaj

இன்று துலீப் டிராபி டெஸ்ட் தொடரின் இரண்டாவது சுற்று போட்டியில் ஆரம்பித்து இருக்கிறது. இதில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிக்கு நேரடி ஒளிபரப்பு இல்லாதது ரசிகர்களை கடுமையாக கோபம் அடைய வைத்திருக்கிறது.

நடப்பு துலீப் டிராபியில் ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மைதானத்தில் ருதுராஜ் தலைமை தாங்கும் இந்தியா சி அணியும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமை தாங்கும் இந்தியா பி அணியும் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

- Advertisement -

நேரடி ஒளிபரப்பு நிறுத்தம்

முதல் சுற்றில் நான்கு அணிகள் மோதிக்கொண்ட இரண்டு போட்டிக்குமே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதழலையில் இரண்டாவது சுற்றில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிக்கு மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மேலும் கடந்தும் வரை இந்தியா சி மற்றும் டி அணிகள் மோதிக்கொண்ட போட்டியை அதிக பார்வையாளர்கள் பார்த்ததாக சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்தப் போட்டியை பார்க்க ரசிகர்களும் பெரிய அளவில் மைதானத்திற்கு வந்தார்கள். ஆனால் இந்தியா ஏ மற்றும் பி அணிகள் மோதி கொண்ட போட்டிக்குபெரிய அளவில் ரசிகர்கள் வரவில்லை. இந்தக் கூட்டம் ருதுராஜுக்காக வந்ததாகவே கூறப்படுகிறது.

- Advertisement -

ருதுராஜ் திடீர் வெளியேற்றம்

இந்த நிலையில் இன்று டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்ய இந்தியா சி அணி வந்தது. முகேஷ் குமார் வீசிய முதல் பந்தில் ருதுராஜ் பவுண்டரி அடித்தார். இரண்டாவது பந்தில் அவர் காயம் காரணமாக வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு உண்மையில் களத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சிலர் அவர் விரலில் பந்து தாக்கியதாக கூறுகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் தெரியவில்லை.

இதையும் படிங்க : தோனி ரோகித்தை ஒதுக்கி..கோலி பும்ராவுக்கு கம்பீர் தந்த மாஸ் பட்டம்.. வித்தியாச சுவாரசிய தேர்வுகள்

இந்த நிலையில் ருதுராஜ் தொடர்ந்து இந்திய அணியில் தேர்வு செய்யப்படாத பொழுதும் கூட, நட்சத்திர வீரர்கள் இல்லாத ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு எதிராக ருதுராஜ் விளையாடிய பொழுது பெரிய ரசிகர்கள் வந்தார்கள், ரசிகர் ஒருவர் வந்து மைதானத்தில் ருதுராஜ் காலில் விழுந்தார், இதன் காரணமாகவே பிசிசிஐ ருதுராஜ் அணி விளையாடும் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை என ரசிகர்களில் சிலர் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இதுவரையில் பிசிசிஐ தரப்பில் இதற்கான விளக்கம் கொடுக்கப்படவில்லை. தற்பொழுது இது சமூக வலைதளத்தில் வைரலாக சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -