“சக வீரர்களும் பயிற்சியாளரும் அறிவுறுத்தியது அதுதான் ஆனாலும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை” – வினோதமான பழக்கம் குறித்து பேட்டியளித்த முகமது சிராஜ்!

0
274

இந்தியன் பிரீமியர் லீ கிரிக்கெட் போட்டிகளின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

28 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும் லக்னோ அணி இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 174 ரன்களுக்கு நான்கு விக்கெட் களை எடுத்தது. பஞ்சாப் அணி 150 ரன்கள் ஆல் அவுட் ஆகி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

பெங்களூர் அணிக்காக மிகச் சிறப்பாக பந்து வீசிய முகம்மது சிராஜ் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்திருக்கிறார். மேலும் 12 விக்கெட்களை வீழ்த்தி இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக பர்பிள் கேப் போல்டராகவும் இருந்து வருகிறார் சிராஜ்.

ஆட்டத்திற்கு பின் நடைபெற்ற ஆர்சிபி சேனலில் பேசிய சிராஜ் “இது போன்ற ஆட்டங்கள் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுப்பவை என தெரிவித்தார். அணியின் வெற்றியில் பங்கு வைப்பது என்பது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான் என கூறினார். இந்த வருடம் நிச்சயமாக தங்களது அணை மிகச் சிறப்பாக செயல்படும் என தெரிவித்த அவர் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருப்பதாக தெரிவித்தார்.

ஒரு விக்கெட்டை வீழ்த்திய உடன் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஃபுட் பாலில் கோல் அடித்து கொண்டாடுவது போன்ற ஒரு கொண்டாட்டத்தை முகமது சிராஜ் செய்து வருகிறார். இது தொடர்பாக பயிற்சியாளர்களும் சக வீரர்களும் அவருக்கு ஏற்கனவே ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். ஆனாலும் அவர் அந்த கொண்டாட்டத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார் இதுகுறித்து ஆர்சிபி சேனலுக்கு பேசியிருக்கும் சிராஜ் பின்வரும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி பேசி இருக்கும் சிராஜ் “இது போற்றி முகமது சமி என்னிடம் கூறினார் வேகப்பந்துவீச்சாளர்கள் இவ்வாறு உயர குதிப்பது நமக்கு காயங்களை ஏற்படுத்தும் என்று. மேலும் என்னுடைய பயிற்சியாளர்களும் அணியின் ட்ரெயினர்களும் இதே கருத்தை தான் முன்வைத்து வருகின்றனர். விக்கெட் வீழ்த்திய பின் ஏற்படும் கொண்டாட்டங்கள் சில நேரங்களில் நமக்கு காயத்தை ஏற்படுத்தும் என. ஆனாலும் கிறிஸ்டியானோ ரொனால்டோ எங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் என்பதால் அந்த கொண்டாட்டத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.