“மோசமான அந்த விஷயம் நடந்தது.. அதான் ஸ்ரேயாஸ்கிட்ட கேள்வி கேட்கல!” – கவாஸ்கர் கூறிய பரபரப்பான தகவல்!

0
1065
Shreyas

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து ஆனால் இந்தியாவின் பக்கம் ஒரு தலைப்பட்சமாக முடிந்து கொஞ்சம் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என்று கூறலாம்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 326 ரன்கள் குவித்து, அதற்குப் பிறகு அதிரடியான பேட்டிங் லைன் அப்பை கொண்ட தென்னாபிரிக்கா அணியை 83 ரன்களில் சுருட்டி, 243 ரன்களில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

போட்டியை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களுக்கு இது சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. நிச்சயம் பெரிய அளவில் போட்டியில் அமைந்து நெருக்கமாக செல்லும் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்தார்கள்.

இந்த நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி உள்ளே வருவதற்கு, இந்திய அணி இரண்டு விக்கெட் இழந்து இருந்த பொழுது ஒரு வாய்ப்பு இருந்தது.

- Advertisement -

ஆனால் ஸ்ரேயாஸ் மற்றும் விராட் கோலி இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி அந்த கடினமான நேரத்தில் இருந்து அணியை கரை சேர்த்தார்கள். ஸ்ரேயாஸ் 87 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.

வெற்றிக்குப் பின் அவரிடம் பேட்டி காண்பதற்காக ரவி சாஸ்திரி மற்றும் கவாஸ்கர் இருவரும் சென்றார்கள். அப்பொழுது கவாஸ்கர் ஸ்ரேயாஸ் இடம் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. தற்பொழுது இது குறித்து அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஆமாம் நான் அவரிடம் ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினேன். ஆனால் இந்திய தேசியக் கொடியில் ஒரு நிறுவனத்தின் பெயர் இருந்ததால் என்னுடைய கவனம் சிதறிவிட்டது. உங்களுக்கே தெரியும் இந்திய தேசியக் கொடியை இப்படி எதனாலும் சிதைக்க கூடாது என்று.

அப்போது அந்த மக்கள் போய்விட்டார்கள். ஆனால் அடுத்த முறை ஏதாவது நடக்கும் பொழுது கொடியை பறிமுதல் செய்வது மட்டுமில்லாமல், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் எந்த நிறுவனமாக இருந்தாலும் காவல்துறை கடுமையாக எச்சரிக்கை செய்ய வேண்டும்.

நிச்சயமாக ரவி சாஸ்திரி நான் ஏதாவது கேள்விகள் கேட்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இந்திய தேசியக் கொடியில் இப்படி ஒன்று நடந்த காரணத்தினால் என்னுடைய கவனம் சிதறிவிட்டது. நான் அதைச் செய்தவர்களை பார்த்து சைகை செய்து கொண்டிருந்தேன்!” என்று கூறி இருக்கிறார்!