வீடியோ: “நல்லவேளை கடைசி பால் என்ன காப்பாதீட்ட..” – அஸ்வினுக்கு நன்றி சொன்ன தினேஷ் கார்த்திக்!

0
39841

கடைசி பந்தில் ரன் அடித்து என்னை காப்பாற்றிய அஸ்வினுக்கு நன்றி என பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் பேசி உள்ளார் தினேஷ் கார்த்திக்.

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இதயத்துடிப்பை சற்றும் குறைக்காமல் கடைசி ஓவர் வரை போட்டியை இரு அணிகளும் எடுத்துச் சென்றன.

- Advertisement -

இந்தியாவுக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயத்திருந்தது பாகிஸ்தான் அணி. 10 ஓவர்களில் இந்திய அணி 60 ரன்களுக்கும் குறைவாகவே அடித்திருந்தது.

அதன் பிறகு ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவரும் போட்டியின் வேகத்தை அதிகரிக்க பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசத் துவங்கினர். கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற 31 ரன்கள் தேவைப்பட்டது.

நல்ல பார்மில் இருந்த ஹாரிஸ் ரவுப் 19வது ஓவரை வீசினார். முதல் நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே வந்திருந்தது. கடைசி இரண்டு பந்துகளில் இரண்டையும் பவுண்டரிகளாக அடித்தாக வேண்டும் என்று இருந்த சூழலில், விராட் கோலி அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசி 15 ரன்கள் ஓவராக மாற்றினார்.

- Advertisement -

கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டபோது, முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழந்தார். அடுத்ததாக நோபாலில் விராட்கோலி சிக்சர் அடிக்க, தேவைப்படும் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டபோது அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஐந்தாவது பந்தில் தினேஷ் கார்த்திக் ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டபோது அஸ்வின் லாவகமாக புத்தியை உபயோகித்து வைடு வாங்கினார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து எளிதாக வெற்றி பெற்று கொடுத்தார்.

இந்திய அணி இந்த வெற்றியை பெறவில்லை எனில் மொத்த பலியும் தினேஷ் கார்த்திக் தலையில் விழுந்திருக்கும். ஏனெனில் தவறான நேரத்தில் ஆட்டம் இழந்து விட்டார். இதற்கு அஸ்வினிடம் பி சி சி ஐ வெளியிட்ட வீடியோவில் நன்றியும் கூறி இருக்கிறார்.

- Advertisement -