“டிவில சொல்லாம என் நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க..!” – முன்னாள் வீரர்கள் மீது பாபர் அசாம் தாக்கு!

0
2685
Babar

நடப்பு 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் மோசமான ஒன்றாக அமைந்திருக்கிறது.

மிகக்குறிப்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு பேட்ஸ்மேன் ஆகவும் கேப்டன் ஆகவும் மோசமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

ஆசியக் கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் அணி உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறுவதோடு, உலகக் கோப்பையை கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று நிறைய முன்னாள் வீரர்கள் கூறியிருந்தார்கள்.

மேலும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்? அதில் யார் யார் எந்தெந்த இடத்தில் விளையாடுவார்கள்? என்பது குறித்தான தெளிவு சிறப்பாக இருப்பதாகவும், பாகிஸ்தான் செட்டில் செய்யப்பட்ட அணியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் ஆசிய கோப்பைக்கு வந்த பின்னால் பாகிஸ்தான் அணியில் இருந்த எல்லா பலவீனங்களும் வெளியில் தெரிய ஆரம்பித்தன. காரணம் பாகிஸ்தான் சொந்த நாட்டை விட்டு வெளியே வந்து இலங்கையில் விளையாடியது. இந்த சமயத்தில் இந்தியாவின் பௌலிங் யூனிட் மிக அபாயகரமான ஒன்றாக மாறிக்கொண்டிருந்தது.

- Advertisement -

இதெல்லாம் சேர்ந்து பாகிஸ்தானை ஆசியக் கோப்பையில் செயல்திறன் மற்றும் மனரீதியாக முடக்கி போட்டு விட்டது. இது இலங்கை அணி உடன் தோல்வியடையும் அளவுக்கு கொண்டு சென்றது. ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கும் முன்னேற முடியாமல் போனது.

இதற்கு அடுத்து உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடையும் அளவுக்கு பாகிஸ்தான் செயல்பாடு மோசமாக மாறியது. இதன் காரணமாக தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நிறைய பிரச்சனைகள் உருவாகி இருக்கிறது. மேலும் பாபர் அசாம் உலகக் கோப்பை முடிந்து கேப்டனாக இருப்பாரா என்பதே சந்தேகம்தான். இதனால் முன்னாள் வீரர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள கேப்டன் பாபர் அசாம் “நான் கடந்த மூன்று ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருக்கிறேன். கேப்டன் பதவியை நான் ஒருபோதும் அழுத்தமாக உணர்ந்தது கிடையாது. உலக கோப்பையில் நான் சரியாக செயல்படாத காரணத்தினால் மக்கள் அப்படி கூறுகிறார்கள்.

நான் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கேப்டன் பதவியில் எப்படி அழுத்தம் இல்லாமல் விளையாடி வந்தேனோ, தற்போதும் அதே மாதிரியான அழுத்தம் இல்லாத மனநிலையில்தான் விளையாடி வருகிறேன்.

இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கும். எனவே ஒவ்வொருவரும் தன்னுடைய சிந்தனையின் அடிப்படையில் ஒரு விஷயம் தொடர்பாக கூறுகிறார்கள். எது எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் பேசுகிறார்கள்.

எனக்கு யாராவது அறிவுரை கூற வேண்டும் என்றால் என்னுடைய எண் இருக்கும், டிவியில் உட்கார்ந்து கொண்டு அறிவுரைகளை சொல்லாமல், தாராளமாக எனக்கு மெசேஜ் மூலமாக அறிவுரைகளை வழங்கலாம!” என்று காட்டமாகவே கூறியிருக்கிறார்!