“வெஸ்ட் இண்டீஸ் இதயத்தில் இப்பொழுதும் டெஸ்ட் கிரிக்கெட் இருக்கிறது” – கெமார் ரோச் உருக்கமான பேச்சு

0
71
Roach

தற்பொழுது வெஸ்ட் இண்டிசனி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது.

இதில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், அடிலைய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

- Advertisement -

இந்த போட்டியில் 11 வது வீரராக பேட்டிங்கில் வந்து, அந்த போட்டியில் அறிமுக வீரராக இருந்த ஷாமார் ஜோசப் மிகச் சிறப்பாக செயல்பட்டார். முதல் இன்னிங்ஸில் குறிப்பிடும்படி 36 ரன்கள் எடுத்தார்.

இதற்கடுத்து தன்னுடைய பந்து வீச்சில் முதல் இன்னிங்ஸின் முதல் பந்தில் ஸ்மித் விக்கெட்டை கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினார். மேலும் அந்தப் போட்டியில் அவர் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஒரு காலத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி உச்சத்தில் இருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் அவர்களது கிரிக்கெட் சரிந்து கீழே விழுந்தது. அதிலிருந்து மீண்டு வந்து டி20 வடிவத்தில் தங்களை உலக சாம்பியன்களாக இரண்டு முறை நிலை நிறுத்தினார்கள். ஆனால் தற்பொழுது அதுவும் சரிந்து இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்காக 80 டெஸ்ட் போட்டிகள் விளையாடி, மேற்கொண்டும் அணியில் நீடித்து வரும் மூத்த வீரரான கெமார் ரோச் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது ” நான் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறேன். நான் ஒருநாள் மட்டும் டி20 வடிவத்தில் விளையாடி இருக்கிறேன். ஆனால் என் இதயத்திற்கு நெருக்கமாக டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே இருக்கிறது. வால்ஸ், அம்ப்ரோஸ், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல் போன்ற லெஜெண்டுகளின் வரிசையில் இருக்க விரும்பினேன். இந்த காலக்கட்டத்தில் வருகின்ற இளம் வீரர்கள் தங்கள் என்ன சாதிக்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக இருக்க வேண்டும்.

முதல் டெஸ்டில் ஷாமார் ஜோசப் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு என்னுடைய சிறந்த அறிவுரை என்னவென்றால், அவர் தனக்கென ஒரு பாணியை உருவாக்க வேண்டும். மேலும் கிரிக்கெட்டில் இருந்து என்ன விரும்புகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது அவர் கிரிக்கெட்டில் இருந்து பணத்தை விரும்புகிறாரா? அல்லது சாதனை புள்ளி விபரங்களை விரும்புகிறாரா? என்பது குறித்து அவர் தெளிவாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். அதைச் சுற்றி நிறைய கவன சிதறல்கள் இருக்கும்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை.. மாஸான வெஸ்ட் இண்டீஸ் உத்தேச பிளேயிங் லெவன்.. 11வரை பேட்டிங்.. கோப்பை உறுதியா?

ஆனால் எங்கள் வீரர்கள் இன்னும் சிவப்புப்பந்து கிரிக்கெட்டை ரசித்து விளையாட விரும்புகிறார்கள். மேலும் வெஸ்ட் இண்டீஸ் உள்நாட்டு வீரர்களின் இதயத்தில் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்கிறது. மேற்கொண்டு நாம் அதற்கு ஆதரவளிப்பது முக்கியம்” எனக் கூறியிருக்கிறார்.