டி20 உலககோப்பை.. மாஸான வெஸ்ட் இண்டீஸ் உத்தேச பிளேயிங் லெவன்.. 11வரை பேட்டிங்.. கோப்பை உறுதியா?

0
453
WI

இந்த ஆண்டு 2024 ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. இந்த தொடரில் 20 நாடுகள் பங்கேற்க, நடத்தப்படும் சுற்றுகளும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த முறை இரண்டு நாடுகள் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துகின்ற காரணத்தினால், இந்த இரண்டு நாடுகளுமே நேரடியாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்று இருக்கின்றன. அமெரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மிகவும் தேய்ந்த நிலையில் கூட, டேரன் சமி தலைமையில் இரண்டு முறை டி20 உலகக்கோப்பை தொடர்களை கைப்பற்றி அசத்தியிருந்தது. அவர்களுக்கு வசதியான வடிவமாக டி20 கிரிக்கெட் வடிவம் இருந்தது. ஆனால் இறுதியில் அதிலும் சரிந்த பொழுதுதான் மிகவும் அதிர்ச்சியாக அமைந்தது.

இந்த நிலையில் பயிற்சியாளராக வெள்ளைப் பந்து பெஸ்ட் இன் திஸ் கிரிக்கெட்டுக்கு டேரன் சமி வந்தார். டி20 கிரிக்கெட் அணிக்கு ரோமன் பவல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தக் கூட்டணியின் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக டி20 தொடர்களை கைப்பற்றி அசத்தியிருக்கிறது.

- Advertisement -

மேலும் இத்தோடு வேகப்பந்து வீச்சு அதிரடி ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் மீண்டும் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு திரும்பியிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் டி 20 அணிக்கும் அழைக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் யூனிட் வலிமையாக இருக்கிறது.

சொந்த நாட்டில் தொடர் நடக்கின்ற காரணத்தினால் வெஸ்ட் இண்டீஸ் பலமான அணியாக கருதப்படுகிறது. ஆனால் அவர்களது பிளேயிங் லெவனை எடுத்துப் பார்க்கும் பொழுது மிகப்பெரிய பலமான அணியாக இருக்கிறது. நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் 11 பேரும் பேட்டிங் செய்யக் கூடியவர்களாக வந்தார்கள். இதிலிருந்து அவர்கள் பலம் புரியும். அந்தப் பிளேயிங் லெவனை கீழே பார்க்கலாம்.

பிரண்டன் கிங், கையில் மேயர்ஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், சிம்ரன் ஹெட்மையர், ரோமன் பவல், ரோமாரியோ செப்பர்டு, ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹுசைன், அல்ஜாரி ஜோசப்.

இப்படி 11 பேரும் பேட்டிங் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதாவது இவர்கள் அனைவருமே சிக்ஸர் அடிக்கும் கெப்பாசிட்டி கொண்ட பேட்ஸ்மேன்கள். மேலும் கூடுதலாக ஒரு ஸ்பின்னர் வேண்டுமென்றால், திறமையான புதிய வரவான குடகேஷ் மோட்டி இருக்கிறார். ஒரு வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டரை நீக்கி இவரை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இவரும் சிறப்பாக சிக்ஸர்கள் அடிக்கக் கூடியவர்.

சொந்த நாட்டில் நடக்கின்ற காரணத்தினாலும், ரசல் போன்ற வீரர்கள் திரும்பி இருப்பதாலும், நல்ல பயிற்சியாளர் வந்திருப்பதாலும், பேட்டிங் வரிசை கடைசி வரை இருப்பதாலும், பந்துவீச்சில் வேகம் மற்றும் சுழல் என சமபலம் இருப்பதாலும், வெஸ்ட் இண்டீஸ் மிக பலமான அணியாகத் தோற்றமளிக்கிறது. சமீபத்தில் பெரிய நாடுகளுக்கு எதிராக வெல்லவும் செய்து இருக்கிறது. இதனால் மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!