டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயிண்ட்ஸ் டேபிள்.. தப்பித்த இந்தியா.. மீண்டும் பைனலுக்கு வாய்ப்பு!

0
1227
WTC

கிரிக்கெட் தொடர்பாக ரசிகர்களின் விருப்ப மனநிலை மாறிக்கொண்டே இருக்கின்ற காரணத்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களிடம் ஆதரவு குறைந்து கொண்டே வந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவது என்பதுகிரிக்கெட்டை காப்பாற்றுவது. உண்மையான கிரிக்கெட் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட் அழிந்தால், கிரிக்கெட் அழிந்து விடும். இதற்காக ஐசிசி இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்துகிறது.

- Advertisement -

தற்பொழுது 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஏறக்குறைய முக்கிய அணிகள் எல்லாமே இரண்டு போட்டிகளுக்கு மேல் விளையாடுகின்றன.

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் வெல்லும் அணிக்கு ஒரு போட்டிக்கு 12 புள்ளிகளும், டிரா ஆனால் 4 புள்ளிகளும், டையில் முடிந்தால் 6 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. மேலும் எத்தனை போட்டிகளில் விளையாடி, எத்தனை போட்டிகளில் வென்று இருக்கிறார்கள் என்கின்ற வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு தீர்மானிக்கப்படுகிறது.

உதாரணமாக நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகள் வென்று இரண்டு போட்டிகள் தோற்றால் 50% வெற்றியாக இருக்கும். அதே ஒரு அணி இரண்டு போட்டிகள் மட்டும் விளையாடி இரண்டையும் வென்றால் வெற்றி சதவீதம் நூறாக இருக்கும். இரண்டு போட்டியில் விளையாடிய 2 போட்டியை வென்ற அணியே முன்னணி பெறும்.

- Advertisement -

தற்பொழுது வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை வென்று ஒரு போட்டியை இந்திய அணி டிரா செய்தது. மேலும் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றை வென்று ஒன்றில் தோற்றது.

தற்பொழுது இந்திய அணி 4 போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என 28 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. ஆனால் ஓவர் தாமதமாக வீசியதால் இரண்டு புள்ளிகள் பிடித்தம் செய்யப்பட்டு விட்டது. இந்திய அணியின் வெற்றி சதவீதம் 54.16 என தற்பொழுது இருக்கிறது. இதன் அடிப்படையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

மொத்தம் இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ள தென் ஆப்பிரிக்கா ஒன்றை வென்று ஒன்றை தோற்றுள்ளதால் வெற்றி சதவீதம் 50 ஆக இருக்கிறது. இந்த அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணியும் இதே அளவில் இருப்பதால் அடுத்த இடத்தில் நீடிக்கிறது.

ஆஸ்திரேலியா ஏழு போட்டிகளில் நான்கில் வெற்றி, இரண்டில் தோல்வி, ஒரு டிரா என வெற்றி சதவீதம் 50 உடன் நான்காவது இடத்திலும், பங்களாதேஷ் இரண்டு போட்டியில் ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் வெற்றி சதவீதம் 50 உடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன.

இதற்கு அடுத்த நான்கு இடங்களில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து இலங்கை என நான்கு நாடுகள் வருகின்றன. மேலும் இந்தியா உள்நாட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. எனவே இந்த முறையும் இந்தியாவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

அதேபோல் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிராக தமது நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. எனவே இந்த டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வருவதற்கு முக்கிய தொடராக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் கடுமையாக போராட வேண்டிய கட்டாயத்தில் சிக்கி இருக்கிறது!