டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. தோற்று கெடுத்த பாகிஸ்தான்.. இந்தியா பின்னடைவு.. ஆஸி முன்னேற்றம்!

0
267
ICT

தற்பொழுது உலக கிரிக்கெட்டில் மிக முக்கியமான இரண்டு டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கின்றன. இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்ட இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் முடிவடைந்து இருக்கின்றன.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமனில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் வென்று இந்திய அணி தொடரை சமன் செய்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் வெற்றி சதவீத அடிப்படையில் முதல் இடத்தை பிடித்தது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட மூன்றாவது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்று முடிவுக்கு வந்தது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்வதற்கு நல்ல வாய்ப்பு இருந்த போதும் கூட, இரண்டாவது இன்னிங்ஸில் 115 ரன்களுக்கு சுருண்டு, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதன் காரணமாக தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. முதல் இடத்தில் இருந்த இந்திய அணி பாகிஸ்தான் அணியின் தோல்வியின் காரணமாக இரண்டாவது இடத்திற்கு தற்போது தள்ளப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

மேலும் ஆஸ்திரேலிய அணி எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி, இரண்டில் தோல்வி, ஒரு டிரா என 54 புள்ளிகள் பெற்றும், 56.25 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் வெற்றி, ஒன்றில் தோல்வி, ஒன்றில் டிரா என 26 புள்ளிகள் பெற்று, 54.16 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது.

அடுத்த மூன்று இடங்களில் தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து பங்களாதேஷ் அணிகள் இருக்கின்றன. பாகிஸ்தான் அணி ஆறாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழாவது இடத்திலும், இங்கிலாந்து மற்றும் இலங்கை எட்டாவது ஒன்பதாவது இடங்களில் இருக்கின்றன.

பாகிஸ்தான் அணியின் தோல்வி இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. ஒருவேளை பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணியின் முதலிடம் இன்னும் மிக உறுதியாக மாறி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!