இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இணைந்திருப்பது உற்சாகம் அளிப்பதாக இருக்கும் என்றும், அவர்களுக்கு எதிராக எல்லாவித திட்டத்தையும் கொண்டு வருவோம் எனவும் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா கூறியிருக்கிறார்.
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து, நாளை ஜார்கண்ட் ராஞ்சி மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி நடைபெற இருக்கிறது.
இந்திய அணிக்கு சிக்கல்
தற்போது கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்த காரணத்தினால் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை. துவக்க இடத்தில் ஜெய்ஸ்வால் இடம் பெறுவார் என்பது உறுதியாக இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயரின் இடம் யாருக்கு கொடுக்கப்படும் என்பது தெரியவில்லை. மேலும் ரிஷப் பண்ட் அணியில் இருப்பதால் அவருக்கும் வாய்ப்பு தரவேண்டி இருக்கும்.
இத்துடன் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இடம் பெறாததால், அவருடைய இடத்தை நிதிஷ்குமார் ரெட்டி இல்லை வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவருக்கு தர வேண்டும். தற்போது இந்திய அணியில் பேட்டிங் வரிசை 8 வரையில் இருக்க வேண்டும் என்றால் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பது பின்னடைவாக இருக்கிறது.
ரோஹித் விராட் உற்சாகமானவர்கள்
இந்த போட்டி குறித்து பேசி உள்ள டெம்பா பவுமா கூறும் பொழுது “இரண்டு வாழும் ஜாம்பவான்கள் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி சிறிது காலம் விளையாட இருப்பது உள்ளூர்வாசிகளுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அந்த இரண்டு பெரிய மனிதர்கள் இருக்கும்போது, அது வித்தியாசமான ஆற்றலை கொடுக்கும். இது நாங்கள் விரும்பக்கூடிய ஒன்று”
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் திலக்கை வச்சு கம்பீருக்கு செம சான்ஸ் கிடைச்சிருக்கு.. உடனே அதை செஞ்சு பாக்கணும் – சபா கரீம் வேண்டுகோள்
“மற்ற வீரர்களுக்கு போலவே அவர்களுக்கும் எங்களுடைய தயாரிப்புகளை செய்வோம். மேலும் அவர்களுக்கு எதிராக நாங்கள் தேவை என்று நினைக்கும் திட்டங்களையும் கொண்டு வருவோம். இது சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் இது உற்சாகமானது. கேப்டன்சி பொறுப்பு என்னுடைய பேட்டிங்கை பாதிக்காது. பேட்டிங் செய்யும் பொழுது பேட்ஸ்மேன் ஆகவும், பிறகு அணியை வழிநடத்தக்கூடிய கேப்டன் ஆக இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.






