ஜெய்ஸ்வால் திலக்கை வச்சு கம்பீருக்கு செம சான்ஸ் கிடைச்சிருக்கு.. உடனே அதை செஞ்சு பாக்கணும் – சபா கரீம் வேண்டுகோள்

0
47
Jaiswal

தற்போது தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்று இருக்கும் ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மாவை வைத்து முக்கியமான சோதனை ஒன்றை கம்பீர் செய்ய வேண்டும் என சபா கரீம் கூறியிருக்கிறார்.

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை ஜார்கண்ட் ராஞ்சி மைதானத்தில் துவங்குகிறது.

- Advertisement -

ஆறாவது பந்துவீச்சாளர் வாய்ப்பு

தற்போது கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் காயம் காரணமாக இந்திய ஒரு நாள் அணியில் இடம் பெறவில்லை. மேலும் சுவாரசியப்படுத்தும் தேர்வாக ருதுராஜ், திலக் வர்மா, ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்று இருக்கிறார்கள். இதில் திலக் வர்மா மற்றும் ஜெய்ஸ்வால் பகுதி நேர பந்துவீச்சாளர்களாக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சபா கரீம் பேசும் பொழுது “திலக் வர்மா பந்து வீச செய்வார். இதேபோல ஜெய்ஸ்வால் பயிற்சியில் கடுமையாக பந்துவீச்சு பயிற்சி செய்வதை நான் பார்த்திருக்கிறேன். எனவே தென் ஆப்பிரிக்க தொடரில் இவர்கள் இருவருக்கும் அணியில் வாய்ப்பு கொடுத்து, இதில் ஒருவரை ஆறாவது பந்துவீச்சு இடத்தை நிரப்ப வைக்க வேண்டும். கம்பீர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”

- Advertisement -

ஜெய்ஸ்வாலுக்கே தெரியாது

” தற்போது இந்திய கிரிக்கெட்டில் எல்லா வடிவத்திலும் விளையாட வேண்டிய வீரராக ஜெய்ஸ்வால் இருக்கிறார். அவர் இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் ஏன் இடம்பெறவில்லை என்பது குறித்து அவருக்கே தெரியாது. தற்போது அவர் மூன்று போட்டிகளும் விளையாடி தனது வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வார் என்று நினைக்கிறேன். அவர் எப்பொழுது வாய்ப்பு கிடைத்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார்”

இதையும் படிங்க : ஸ்பின் விளையாட சொல்லி கொடுங்க.. இந்த முன்னாள் வீரர் கிட்ட கத்துக்க ரெடி – கேஎல் ராகுல் பேட்டி

“ஜெய்ஸ்வால் மேல் இந்திய தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் அவர் நமக்கு உலக கோப்பையில் நல்ல பலனை தரக்கூடிய ஒரு வீரராக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -