100 ஆண்டுகள் கிரிக்கெட்.. கேப்டன் டெம்பா பவுமா படைத்த மெகா சாதனை.. வரலாற்றில் 2வது வீரர்

0
169
Bavuma

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் வரலாற்றில் மெகா சாதனையை படைத்திருக்கிறார். மேலும் இந்த சாதனையை செய்த இரண்டாவது வீரராகவும் முத்திரை பதித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் தென் ஆப்பிரிக்க அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் நேற்று தென் ஆப்பிரிக்கா அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க சோகம்

சர்வதேச கிரிக்கெட்டில் பல திறமையான வீரர்களை தென் ஆப்பிரிக்க தேசம் கொண்டிருந்த பொழுதும் அவர்களால் உலகக் கோப்பை தொடரை வெல்ல முடியாமல் இருந்து வந்தது. 1998 ஆம் ஆண்டு தற்போது சாம்பியன்ஸ் டிராபி என்ற பெயரில் நடைபெறும் தொடரை மட்டுமே அந்த அணி வென்று இருந்தது. அவர்களுக்கு ஐசிசி உலகக் கோப்பை வெற்றி என்பது கனவாகவே அமைந்தது.

இப்படியான நிலையில் கடந்த ஆண்டு இந்திய அணிக்கு எதிராக டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் நேற்று டெம்பா பவுமா தலைமையில் உலகக் கோப்பை தொடரை டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் தென் ஆப்பிரிக்க அணி வென்று வரலாற்றில் முதல் முறையாக சாதனை படைத்தது.

- Advertisement -

டெம்பா பவுமா நூறு ஆண்டு சாதனை

மேலும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டு இதுவரையில் மொத்தம் பத்து போட்டிகளுக்கு செயல்பட்டு இருக்கிறார். இந்த பத்து போட்டிகளில் ஒன்பது போட்டிகளை அவர் கேப்டனாக வென்றிருக்கிறார். மேலும் மீதமுள்ள ஒரு போட்டியும் டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் அவர் இதுவரையில் கேப்டனாக டெஸ்ட் போட்டியில் தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : WTC பைனல்.. மார்க்ரம் சதத்தை விட.. தென் ஆப்பிரிக்கா எழுச்சி பெற இவர் தான் முக்கிய காரணம்.. ஆஸி முன்னாள் வீரர் கருத்து

இத்துடன் கடந்த 100 ஆண்டுகளில் டெஸ்ட் கேப்டனாக பத்து போட்டிகளில் ஒன்பது போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் என்கின்ற சாதனையைப் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு 1920 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பெர்ரி சாப்மன் கேப்டனாக முதல் பத்து போட்டிகளில் ஒன்பது போட்டிகளை வென்று இருந்தார். அதற்குப் பிறகு நூறு வருடங்கள் கழித்து டெம்பா பவுமா இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -