தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 27 வருடங்களுக்குப் பிறகு ஐசிசி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற முக்கிய தருணமாக இருந்ததை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா பைனல்
லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள், தென்னாபிரிக்க அணி 138 ரன்கள் எடுத்த நிலையில் அதற்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணியை தென் ஆப்பிரிக்க அணி தனது சிறப்பான பந்துவீச்சால் 207 ரன்களுக்குள் சுருட்டியது.
இதில் முதலில் விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை என்றாலும் இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 3 விக்கட்டுகள் கைப்பற்றினார். அதில் ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டம் இழந்த விதம் தென் ஆப்பிரிக்கா அணியின் எழுச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருக்கிறார்.
இதுதான் திருப்புமுனை
இதுகுறித்து அவர் கூறும் போது “சத்தியமாக சொல்ல வேண்டுமென்றால், ஆஸ்திரேலிய அணி இந்த மைதானத்தில் கடைசியாக தோல்வி அடைந்தது எனக்கு ஞாபகமே இல்லை. அந்த அளவிற்கு ஐசிசி இறுதிப் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் செயல் திறன் அந்த அணி எவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது. இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா கடைசியாக தோல்வியடைந்தது ஞாபகம் இல்லை. 22 வருடமாக இங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதையும் படிங்க:2024 டி20 WC தோல்விதான் எனக்கு இந்த மாற்றத்தை தந்தது.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் சதம் அடித்த மார்க்ரம் பேட்டி
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை எடுத்துக் கொண்டால் ஒப்பீட்டளவில் தென்ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணியை விட சற்று அனுபவம் குறைந்தது தான். ஆனால் இந்த வெற்றி அவர்களுக்கானது. லுங்கி இங்கிடி போன்ற ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் இரண்டாவது இன்னிங்ஸில் அவரது பந்துவீச்சு அற்புதமாக அமைந்தது. அதிலும் ஆஸ்திரேலியா அணியின் சின்னமான ஸ்டீவ் ஸ்மித்தை வெளியேற்றிய விதம் பெரிய திருப்புனையாக அமைந்தது” என்று அவர் கூறியிருக்கிறார்.






