“எங்களை நம்ப சொன்னிங்க!” – ரோகித்துக்காக மும்பை வெளியிட்ட உருக்கமான பதிவு!

0
988
Rohit

ஐபிஎல் தொடரில் மிகப் பெரிய சந்தை மதிப்பை கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பத்து வருடங்களாக கேப்டனாக இருந்து வந்தவர் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா.

2013 ஆம் ஆண்டு முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்ற அவர் அந்த ஆண்டிலேயே ஐபிஎல் பட்டத்தை முதல்முறையாக அந்த அணிக்கு வென்று கொடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய நான்கு வருடங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை ஐபிஎல் தொடரில் வென்றது. இந்த நான்கு முறையும் கேப்டனாக ரோஹித் சர்மாவே தொடர்ந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கென ஒரு வெற்றிகரமான அதிரடியான கலாச்சாரம் உருவானதில் கேப்டன் ரோகித் சர்மாவின் பங்கு பெரியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாள வீரர்களின் ரோகித் சர்மா முக்கியமானவர்.

இந்த நிலையில்தான் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டு செய்த டிரேடிங் நிகழ்ச்சியாக குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் வாங்கியது.

- Advertisement -

ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறும் வரை கேப்டனாக நீடிப்பார், அதற்குப் பிறகு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆக வருவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று வெளியில் கூறப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் மும்பை இந்தியன்ஸ் வெளியிடப்பட்டது.

இச்சூழலில் ரோகித் சர்மாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் “2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டீர்கள். நீங்கள் அப்போது எங்களை நம்பிக்கையாக இருக்க சொன்னீர்கள். வெற்றி தோல்விகளில் எங்களை சிரிக்க சொன்னீர்கள். இப்போது 10 வருடத்திற்கு பிறகு எங்களின் எப்பொழுதுமான கேப்டனே, உங்கள் பாரம்பரியம் நீலம் மற்றும் தங்க நிறத்தில் பொறிக்கப்படும். நன்றி கேப்டன் ரோஹித்!” என்று உருக்கமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது!