2023 உலககோப்பைக்கு கேஎல் ராகுல் கண்டிப்பாக வேண்டுமா? – தினேஷ் கார்த்திக் கொடுத்த பதில்!

0
441

2023 உலககோப்பை செல்லும் இந்திய அணியில் கேஎல் ராகுல் இருக்கணுமா? என்பதற்கு விளக்கமளித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய கேஎல் ராகுல் தனது பழைய பார்மை கொண்டு வருவதற்கு மிகவும் போராடி வருகிறார். டி20 உலக கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி வெறும் 128 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

- Advertisement -

டி20 உலககோப்பையில் இவரது சராசரி 22 ஆகும். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கினாலும் மீதமுள்ள போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களையே அடித்திருந்தார். உடனடியாக நடைபெற்ற நியூசிலாந்து அணியுடன் தொடரின் போது இவருக்கு முழு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.

மீண்டும் வங்கதேச அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் விளையாடினார். முதல் போட்டியில் 73 ரன்கள் அடித்தவர், பின்னர் 14 ரன்கள், 8 ரன்கள் என 2வது மற்றும் 3வது போட்டிகளில் மீண்டும் சொதப்பினார்.

துவக்க வீரராக களமிறங்கி தடுமாறியதால், மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்டார். ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியேறிய போதும் கேஎல் ராகுல் துவக்க வீரராக இறங்காமல், ஐந்தாவது இடத்திலே தொடர்ந்து விளையாடினார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு வந்து விட்டால் கேஎல் ராகுலின் நிலை என்ன? 2023ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையில் கே.எல் ராகுல் இருக்க வேண்டுமா? என்ற பல கேள்விகளுக்கு தினேஷ் கார்த்திக் தனது பதிலை கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது:

“கே எல் ராகுலிடமிருந்து சிறந்த பேட்டிங்கை கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் அவரை ஐந்தாவது வீரராக களமிறக்கி வருகின்றனர். வந்த உடனே அதிரடியாக விளையாட ஆரம்பித்தால், அவர் எவ்வளவு சிறப்பான பேட்டிங்கை கொடுப்பார் என்று பலரும் அறிவோம். அதை வெளிக்கொணர்வதற்கு இந்திய அணிக்கு நிறைய முயற்சிகளை மேற்கொள்கின்றது

இதன் காரணமாகத்தான் ரோஹித் சர்மா இல்லாதபோதும் அவர் ஓப்பனிங் செய்யாமல் கீழ் வரிசையில் தொடர்ந்து களமிறங்கினார். கே எல் ராகுலை பேட்ஸ்மேனாக பார்ப்பதை தாண்டி ஒரு விக்கெட் கீப்பராகவும் இந்திய அணி பார்க்கிறது. உலக கோப்பைக்கு இவரை போன்ற உயரமான விக்கெட் கீப்பர் தேவை என்பதற்காக இந்திய அணி சில முயற்சிகள் செய்கிறது.

கேஎல் ராகுல் போன்ற திறமையான வீரர் வெளியில் இருப்பது சரியான முடிவாக இருக்காது என்பது எனது கருத்து. அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். இன்னும் சில போட்டிகள் அவர் விளையாடுவதை வைத்து உலககோப்பைக்கான முடிவை எடுப்போம்.” என்றார்.