இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் 359 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது. இந்த இலக்கை இந்திய அணி சேஸ் செய்தால் இந்தியா வெற்றி பெற்ற அதிகபட்ச ரன்கள் இலக்குகளில் இதுவும் ஒன்றாக அமையும்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி சேஸ் செய்த 5 அதிகபட்ச ரன்கள் இலக்கை இதில் காணலாம். இதில் இந்திய அணி 400க்கும் அதிகமான ரண்களையும் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சேஸ் செய்த 5 அதிகபட்ச ரன்கள்
இந்திய கிரிக்கெட் அணி 2001ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை நிர்ணயத்த 264 ரன்கள் இலக்கை இந்தியா வெற்றிகரமாக சேஸ் செய்திருக்கிறது. அந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் கங்குலி 98 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். அதில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நான்காவதாக 2011ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அந்த அணி நிர்ணயத்த 276 ரன்கள் இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்தது. அதில் சச்சின் 76 ரன்களும், விவிஎஸ் லட்சுமணன் 58 ரன்களும் குவித்தனர். மூன்றாவதாக 2021ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கபாவில் பெற்ற வரலாற்று வெற்றி இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆஸ்திரேலியா நிர்ணயித்த 329 ரன்கள் இலக்கை கில் 91 ரன்களும், பண்ட் 89 ரன்களும் குவித்தனர்.
2008 சம்பவத்தை மீண்டும் நினைவு கூறுமா இந்தியா
இதில் குறிப்பிடத்தக்கவிதமாக 2008ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணி நிர்ணயித்த 387 ரன்கள் இலக்கை இந்தியா வெற்றிகரமாக சேஸ் செய்தது. அதில் ஷேவாக் 83 ரன்களும், சச்சின் 103 ரன்களும் குவித்தனர். அதில் தோனியும் அதிகபட்சமாக 53 ரன்கள் குவித்தார். எனவே இந்தியாவில் அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்ட ரன்கள் இலக்காக கருதப்படும் இந்த போட்டியை போலவே தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 359 ரன்கள் இலக்கை இந்தியா சேஸ் செய்து வெற்றி பெறுமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க:ஒரு டெஸ்ட் கூட ஆடல.. ஆனா ஆஸி தொடருக்கு நிதிஷ்குமார எடுக்க காரணமே இதுதான் – அனில் கும்ப்ளே விளக்கம்
அதை ரோகித் அணி நிறைவேற்றுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் 1976ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா 406 ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்திருக்கிறது. அதில் சுனில் கவாஸ்கர் 102, மொஹைந்தர் அமர்நாத் 85, குண்டப்பா விஸ்வநாத் 112 ஆகியோர் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தனர்.






