இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான 18 பேர் கொண்ட இந்திய அணி இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இதில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்திய இளம் வீரர் குறித்து முன்னாள் இந்திய சுழற் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் இந்திய அணியின் வசம் இருக்கும் நிலையில் அதைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா அணி திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருப்பதால் 18 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 1991 மற்றும் 92ஆம் ஆண்டுக்கு பிறகு 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிவிப்பது இதுவே முதல் முறையாகும்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சரிசமமான கலவையில் அமைந்திருக்கும் இந்த அணிக்கு கூடுதல் ஆல் ரவுண்டராக ஐபிஎல் மற்றும் சமீபத்தில் இந்திய அணிக்கு அறிமுகமாகி கலக்கிய ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். முதல் தர கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் என பெரிதாக புள்ளி விவரங்கள் இல்லாத நிலையிலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இவரது முதிர்ச்சியான ஆட்டமே தேர்வு செய்யப்பட்டதற்கு காரணம் என்று அனில் கும்ப்ளே கருதுகிறார்.
நிதீஷ்குமார் ரெட்டி தேர்வு செய்ய காரணம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நிதிஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் அந்த அளவுக்கு முதல் தர கிரிக்கெட்டிலோ அல்லது புள்ளி விவரங்களின் அடிப்படையில் எழுதுவதற்கு எதையும் குறிப்பிடத்தக்க அளவில் விளையாடவில்லை. ஆனால் அவர் மிகவும் நம்பிக்கை கொண்ட திறமைசாலி. அவர் வேகப்பந்து வீச்சாளர் மட்டுமல்லாமல் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அழுத்தமான சூழ்நிலைகளில் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க:கவலையா இருக்கு.. இதை எப்படி மிஸ் பண்ணீங்க விராட்.. மில்லியன் தடவ நானே இந்த விஷயத்தை பேசி இருக்கேன் – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்
இதனால் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம்” என்று கும்ப்ளே தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அறிமுகமான நிதிஷ்குமார் ரெட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் அறிமுகம் ஆகி தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






