இந்தியாவின் உள்நாட்டு ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கால் இறுதி சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு போட்டியில் தமிழ்நாடு அணியும் சௌராஷ்டிரா அணியும் மோதிக்கொண்ட போட்டி கோவையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணி 77.1 ஓவரில் 183 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஹர்விக் தேசாய் 83 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணியின் தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய தமிழ்நாடு அணி 338 ரன்கள் குவித்தது. தமிழக அணியின் தரப்பில் இந்திரஜித் 80, பூபதி குமார் 65, சாய் கிஷோர் 60 ரன்கள் எடுத்தார்கள். தமிழக அணி 155 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய சௌராஷ்டிரா அணி தமிழக அணி கொடுத்த முன்னிலையை கூட தாண்டாமல் 75.4 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழக அணியின் தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதன்மூலம் தமிழக அணி ரஞ்சி கால் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த சவுராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் மற்றும் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது.
ஏழு ஆண்டுகளாக இந்திய அணி கால் இறுதி சுற்றுக்கே தகுதி பெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று, புஜாரா, ஜெயதேவ் உனட்கட் போன்ற பெரிய வீரர்கள் இடம் பெற்று இருக்கும் சௌராஷ்டிரா அணியை வென்று அரை இறுதிக்கும் தகுதி பெற்று அசத்தியிருக்கிறது.
மேலும் இந்த போட்டியில் பந்துவீச்சில் மொத்தம் ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றியும், பேட்டிங்கில் நைட் வாட்ச்மேன் ஆக மூன்றாவது விக்கெட்டுக்கு வந்து 60 ரன்கள் எடுத்த கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க : குல்தீப் விக்கெட் எடுக்க.. அஸ்வின் தந்த தெறி ஐடியா.. நீ உண்மையாவே சயின்டிஸ்ட்தான்பா
கூடிய விரைவில் இவரை இந்திய அணியின் சில வடிவங்களில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த முறையை ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தால், நிச்சயம் சாய் கிஷோர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலுமே நல்ல பங்களிப்பை கொடுக்கக்கூடிய வீரராக இருப்பார்!