இதுவரையிலான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ரன் சராசரியில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளராக இந்தியாவின் ஜஸ்பரித் பும்ரா இருக்கிறார்..
மேலும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த ஒரே பந்துவீச்சாளராகவும் இவரே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மிகப் பிரம்மாண்டமான சாதனைகள் இந்த வாரத்தில் அவருக்கு கிடைத்திருக்கின்றன.
பும்ராவை பொறுத்தவரையில் தன்னுடைய பந்துவீச்சு திறமையின் காரணமாக ஆட்டத்தில் இருந்து ஆடுகளத்தை எடுத்து விடக் கூடியவர். ஆடுகளம் எப்படி இருந்தாலும் அவரால் தாக்கத்தை உண்டாக்க முடியும்.
அவரிடம் இதற்கு என ஸ்விங் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங், மேலும் தரமான யார்க்கர் மற்றும் எதிர்பார்க்காத மெதுவான பந்துகள் என்று நிறைய வகைகள் வைத்திருக்கிறார்.
நிலைமை எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி தன்னுடைய பந்துவீச்சு ஆயுதக்கிடங்கில் இருந்து சரியான ஆயுதத்தை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் பும்ரா வல்லவர். இதை எல்லோரும் உணரும் விதமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் செய்து காட்டி இருக்கிறார்.
இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி கூறும் பொழுது பும்ராவின் டெஸ்ட் பந்து வீச்சு சராசரி 20ல் இருக்கிறது. மேலும் அவர் 150 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி இருக்கிறார். இதுபோன்ற நம்பர்களை நாம் லெஜன்ட் மால்கம் மார்ஷல் மற்றும் ரிச்சர்ட் ஹாட்லி ஆகியோரிடம் கேள்விப்பட்டிருக்கிறோம். இவரிடம் இருப்பது மிகவும் அற்புதமானது.
பும்ரா பந்துவீச்சில் உருவாக்கும் கோணம் என்பது அவருக்கு கடவுள் தந்த பரிசு. கிரீசிலிருந்து வைடாக வந்து அவர் பந்து வீசக்கூடிய பகுதிகள் சில நேரங்களில் இயற்பியலை மீறக் கூடியதாக இருக்கிறது. அவரால் போட்டியிலிருந்து ஆடுகளத்தை தனது திறமையின் மூலமாக எடுத்து விட முடிகிறது.
காயத்திலிருந்து திரும்பி இருக்கும் அவரது பார்ம் ஆஸ்திரேலியாவின் லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர் டென்னிஸ் லில்லி போல இருக்கிறது. அவர் 1970 இல் முதுகுப்பகுதியில் காயத்தால் பாதிக்கப்பட்டு திரும்ப வந்தார். திரும்ப வந்த அவர் மிகவும் சக்தி வாய்ந்த பந்துவீச்சாளராக திகழ்ந்தார்.
இதையும் படிங்க : “எல்லார் முன்னாடியும் மெக்கலம் இடம் மன்னிப்பு கேட்டேன்.. எந்த தவறும் இல்லை” – கம்பீர் தகவல்
பும்ராவும் அப்படித்தான் தன்னுடைய வேகத்தை இன்னும் இழக்காமல் வைத்திருக்கிறார். இது அவருடைய தைரியத்தை காட்டுகிறது. என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன் இதை செய்வது சாதாரண விஷயம் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.