ராஜஸ்தான் டீம்ல ரெண்டு பேர நல்லா தெரியும்.. அவங்களுக்காகவே இந்த ஸ்பெஷல் பிளான் பண்ணினோம் – ரிஷப் பண்ட் பேட்டி

0
335
Rishabh

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி கேப்பிடல் சனி தங்கள் சொந்த மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. போட்டிக்கு பிறகு வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.

இந்தப் போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ஜாக் பிரேசர் மெக்கர்க் 20 பந்தில் 50 ரன்கள், அபிஷேக் போரல் 36 பந்தில் 65 ரன்கள் எடுத்தார்கள். ராஜஸ்தான் அணியின் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 24 ரன்களுக்கு மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் 2 பந்தில் 4 ரன்கள், ஜோஸ் பட்லர் 17 பந்தில் 19 ரன்கள், ரியான் பராக் 22 பந்தில் 27 ரன்கள் என தொடர்ந்து வெளியேறினார்கள். முக்கிய மூன்று விக்கெட்டுகளை சொற்ப ரன் களுக்கு இழந்ததால் ராஜஸ்தான் அணி நெருக்கடியில் சிக்கியது.

ஆனால் ஒரு முனையில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பிறகு பேசிய டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கூறும்போது “போட்டியின் பின் இறுதியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் யார்க்கர் பந்தை செயல்படுத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. நாம் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் போட்டியில் இருந்து நேர்மறையான விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். கடைசி கட்டத்தில் வரக்கூடிய ரோமன் பவல் மற்றும் டோனவன் பெரீரா ஆகியோருக்கு பேட்டிங்கில் சில பிரச்சனைகள் இருக்கும் என்று தெரியும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஜாக் பிரேசர் கிடையாது.. எங்கள் தோல்விக்கு முழு பெருமையும் இவருக்கு தான் – சஞ்சு சாம்சன் வெளிப்படை பேச்சு

எனவே அவர்களுக்கு எதிராக 18வது ஓவர் வரை குல்தீப் யாதவி ன் கடைசி ஓவர் வரை கொண்டு வந்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே அவரும் எங்களுக்கு செய்து கொடுத்தார். நாங்கள் எடுத்த ரன்கள் சரியாக இருந்தது என்று நினைத்தோம். மேலும் இம்பேக்ட் பிளேயரை முடிந்த வரை தாமதப்படுத்தி, தேவையான வீரரை இம்பேக்ட் பிளேயர் ஆக எடுக்க முடிவு செய்திருந்தோம்” என்று கூறி இருக்கிறார்.