“இந்த 24 வயசு பையனை உலக கோப்பைக்கு எடுக்கலனா சச்சினை எடுக்காத மாதிரி!” – இங்கிலாந்து வீரர் அதிரடி கருத்து!

0
7536
Sachin

உலகக் கிரிக்கெட்டில் மிகவும் தனித்துவம் வாய்ந்த வீரர் மற்றும் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். அவருடைய பேட்டிங் தொழில்நுட்பங்கள் இப்பொழுது வரை எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும் கிடைக்காத ஒன்றான அரியதாக இருக்கிறது!

சச்சின் டெண்டுல்கர் பதினாறாவது வயதில் 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அந்த முதல் தொடரிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்ப்பவராக இருந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 19 வயதில் அவர் விளையாடினார். அவர் மொத்தம் ஆறு உலகக் கோப்பைகளில் விளையாடி இருக்கிறார்.

தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் உலகச் சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து அணி இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக, உள்நாட்டில் நான்கு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது.

இந்த ஒருநாள் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணிதான் உலகக்கோப்பை தொடருக்கும் பங்குபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணியில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வீரர் ஹாரி புரூக் இடம்பெறவில்லை என்பது ஒரு அதிர்ச்சி செய்தியாக அமைந்திருந்தது.

- Advertisement -

இங்கிலாந்து நட்சத்திர வீரர் பெண் ஸ்டோக்ஸ் இவரை அடுத்த விராட் கோலியாக வரக்கூடியவர் என்று பாராட்டி இருந்தார். மேலும் இவரது பேட்டிங் செயல்பாடும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. சமீபத்தில் 100 பந்து தொடரில் துவக்க வீரராக அதிரடியாக சதம் அடித்திருந்தார். தற்பொழுது இவரை உலகக் கோப்பையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மிக வலிமையாக எழுந்து வருகிறது.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் புட்சர் கூறுகையில்
“மிக இளமையாக இருக்கிறார் அதனால் அவர் அணியில் இடம் பெறக் கூடாது என்பது, சச்சின் இளமையாக இருந்ததால், அவரை உலகக் கோப்பை அணியில் சேர்க்கக்கூடாது என்பதுபோல இருக்கிறது.

இங்கிலாந்து அணியில் தற்போது சேர்க்கப்பட்டிருக்கும் டேவிட் மலான் மற்றும் ஜேசன் ராய் இருவரும் தங்களுடைய பழைய சாதனைகளுக்கு அப்பாற்பட்டு தற்போது எந்த பேட்டிங் ஃபார்மையும் காட்டி விடவில்லை.

புரூக் மிகவும் அபாயகரமான சிறந்த வீரர். டேவிட் மலான் மற்றும் ஜேசன் ராய் இருவரில் ஒருவருக்கு பதிலாக, இவரை அணியில் சேர்த்து இருப்பதற்கான வாய்ப்புகளை தேர்வு குழுவினர் கண்டுபிடித்து இருந்திருக்க வேண்டும்!” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்!