கடைசி மேட்ச் 2 விக்கெட் எடுத்தும்.. தீபக் சகார் இன்னைக்கு விளையாடாத காரணம் இதுதான்.. சூரியகுமார் விளக்கம்.!

0
1324

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 4 டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியா தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் 5-வது மற்றும் இறுதி டி20 போட்டி பெங்களூரில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் 8 விக்கெட் இழந்திருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்களும் அக்சர் பட்டேல் 31 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா தற்போது 22 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து இருக்கிறது.

- Advertisement -

கடந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் வீரர்களில் பவுலிங் ஆல் ரவுண்டர் தீபக் சகார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷதிப் சிங் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியும் தீபக் சகார் நீக்கப்பட்டது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை காயம் காரணமாக அவர் அணியில் இடம் பெறவில்லையா எனவும் சந்தேகம் ஏற்பட்டது.

இது தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பதிலளித்திருக்கிறார். டாஸ் முடிந்தபின் பேசிய அவர் ” நாங்களும் முதலில் பந்து வீச விரும்பினோம். டாஸ் நம் கையில் இல்லை. வீரர்களிடம் எதையும் மாற்றாமல் வழக்கம் போல் அதிரடியாக விளையாடுங்கள் என கூறினேன். ரசிகர்களுக்கு முன் மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அணியின் திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை.

விரர்களிடம் ஆடுகளத்திற்கு சென்று உங்களது உணர்வை வெளிப்படுத்தி ஆட்டத்தை ரசித்து விளையாடுங்கள் என்பதுதான் அணி நிர்வாகத்தின் அறிவுரை. பேட்டிங் யூனிட் இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தப் போட்டியிலும் அது தொடரும் என்று நம்புகிறேன். தீபக் சகருக்கு பதிலாக இந்த போட்டியில் அர்ஷதீப் சிங் விளையாடுகிறார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தீபக் இந்த போட்டியில் பங்கு பெற முடியவில்லை .

- Advertisement -

அவர் மருத்துவ எமர்ஜென்சிக்காக தனது சொந்த ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம். அதனால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக முடிக்க நினைக்கிறோம் என தெரிவித்திருக்கிறார். தீபக் சகார் நீண்டகாலமாக காயங்களால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் 6 போட்டிகள் வாரியாக நிலையில் காயம் காரணமாக வெளியேறினார் .

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் காயமடைந்தவர் அந்த ஆண்டு நடைபெற இருந்த உலகக்கோப்பை போட்டியிலும் பங்கேற்க முடியவில்லை. 2023 ஐபிஎல் தொடருக்கு முன்பாக உடல் தகுதியை நிரூபித்து சென்னை அணிக்காக விளையாடினார். எனினும் போட்டியில் இருந்து காயம் காரணமாக பாதியிலேயே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது