T20i சீரிஸ் சஞ்சு சாம்சன் சாகல்.. வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?.. வெளியான பரபரப்பான காரணங்கள்!

0
3363
Chahal

தற்போது இந்தியாவில் 13-வது ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைத் தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. இதற்கு அடுத்து உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் நவம்பர் 23ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்க இருக்கிறது.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய முன்னணி வீரர்கள் அனைவரும் பங்கேற்றிருந்த காரணத்தினால், கில் வரை எல்லோருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதே சமயத்தில் ஹர்திக் பாண்டியா காயம் குணமடையாத காரணத்தினால் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ருத்ராஜ் முதல் மூன்று போட்டிகளுக்கு துணை கேப்டனாக இருப்பார். கடைசி இரண்டு போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் திரும்ப வந்து அவர் துணை கேப்டன் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.

அறிவிக்கப்பட்ட இந்த டி20 இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் சாகல் இருவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்திய அணி நிர்வாகம் ஏறக்குறைய இவர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து வைத்திருப்பதாகவே தெரிகிறது. தற்பொழுது இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாத குறித்தான காரணங்கள் தெரிய வந்திருக்கிறது.

- Advertisement -

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடைபெற்ற பொழுது, உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி தொடர் நடைபெற்றது. இதில் ஆறு போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன் 138 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதே நேரத்தில் ரியான் பராக் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் 510 மற்றும் 485 ரன்கள் விளாசி தள்ளினார்கள். ஆனால் இவர்களுக்கே வாய்ப்பு தரப்படவில்லை. எனவே டி20 வடிவத்தில் தாக்கத்தை தர முடியாத காரணத்தினால் சஞ்சு சாம்சன் விலக்கப்பட்டு இருக்கிறார்.

அதே சமயத்தில் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் பதினாறு சர்வதேச டி20 போட்டிகளில் 25 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் அவர் ஆட்டத்தின் எந்தப் பகுதியிலும் பந்து வீசக்கூடியவராக இருக்கிறார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அவரால் கடைசிக்கட்டத்தில் கூட பந்து வீச முடியும். அவர் ரன்களை சிறந்த முறையில் கட்டுப்படுத்தக் கூடியவராகவும் இருக்கிறார்.

இந்த வகையில் சாகல் ரன்களை விட்டுத் தரும் ஒரு விக்கெட் டேக்கர் பவுலராக இருக்கிறார். மேலும் அவர் மிடில் ஓவர்களில் மட்டுமே பந்து வீசுவார். அவர் விக்கெட் எடுக்காத பொழுது அவர் கொடுக்கும் ரன்கள் அணிக்கு பின்னடைவை உருவாக்குகிறது. எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரவி பிஷ்னோயை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உருவாக்குகிறதாக தெரிகிறது.

தற்பொழுது இதன் காரணமாகவே இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சன் மற்றும் சாகல் இருவரையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சேர்க்கவில்லை. இந்த முடிவை இப்பொழுதே எடுத்திருக்கின்ற காரணத்தினால் அடுத்த வருடம் வரை இவர்கள் இந்திய அணியில் இடம் பெற மாட்டார்கள் என்பது உறுதி. ஏனென்றால் அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பை நடைபெற இருக்கிறது.