டி20 ரேங்கிங்.. ரவி பிஸ்னாய் முதல் இடத்துக்கு வந்தது எப்படி?.. சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி!

0
931
Ravi

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி நான்குக்கு ஒன்று என கைப்பற்றி அசத்தியது.

இந்தத் தொடரில் இந்திய வெற்றிக்கும் ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கும் இடையில் மிக முக்கிய காரணமாக இருந்தது இந்திய சுழற் பந்துவீச்சு துறைதான்.

- Advertisement -

இந்திய மண்ணில் பெரிய அனுபவம் இல்லாத மற்றும் சர்வதேச அனுபவம் இல்லாத ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களால் இந்தியாவின் சுழற் பந்துவீச்சை எதிர்த்து திறமையாக விளையாட முடியவில்லை. மேலும் இந்தியாவின் சுழற் பந்துவீச்சும் மிகத் திறமையாக அமைந்திருந்தது.

இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அச்சர் படேல் மற்றும் ரவி பிஸ்னாய் இருவரும் சுழல் பந்துவீச்சில் கூட்டணி அமைத்து, பவர் பிளே முதல் கொண்டு மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தார்கள்.

மிகக்குறிப்பாக ரவி பிஸ்னாய் மொத்தம் ஐந்து ஆட்டங்களில் ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். மேலும் அவரே தொடர் நாயகன் விருதையும் வென்றார். பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்களில், ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவில் பந்து வீசி ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றியது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று ஐசிசி வெளியிட்ட டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரவி பிஸ்னாய் முதலிடம் பிடித்திருக்கிறார். ரஷித் கான் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ரவி பிஸ்னாய் 699 புள்ளிகள் உடன் முதல் இடத்திலும், ரஷீத் கான் 692 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டதும் எப்படி ஒரு பந்துவீச்சாளரால் முதல் இடத்தை அடைய முடியும்? என்று சமூக வலைதளங்களில் சில வெளிநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் சந்தேகங்களை கிளப்பி வருகிறார்கள். ரவி பிஸ்னாய் ஆஸ்திரேலிய தொடரின் போது எத்தனை புள்ளிகளில் இருந்தார்? ஐந்து போட்டிகளிலும் அவருக்கு எத்தனை புள்ளிகள் கிடைத்தது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக ரவி பிஸ்னாய் 603 புள்ளிகள் எடுத்திருந்தார். மேலும் டி20 பந்துவீச்சு தரவரிசையில் 19ஆவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் இடத்தில் இருந்த ரஷித் கான் அப்போது எடுத்திருந்த புள்ளிகள் 692.

முதல் போட்டி – 614 புள்ளிகள் – 18 வது இடம்
2வது போட்டி – 648 புள்ளிகள் – 11வது இடம்
3வது போட்டி – 665 புள்ளிகள் – 5வது இடம்
4வது போட்டி – 692 புள்ளிகள் – முதல் இடம்
5வது போட்டி – 699 புள்ளிகள் – முதல் இடம்